பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமவியல் 187 உவமையும் பொருளும் வேறு வேறு நிறுத்தி இதுபோலும் இதுவென்று கூருது அவ்விரண்டினையும் ஐயுறச் சொல்லுதலும் உவமையைப் பொருளாக்கிப் பொருளை உவமையாக்கிச் சொல்லு தலும் என இங்ங்ணம் தடுமாறி வரும் உவமம் தவறென்று விலக் கப்படாதென்றும், ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமித்து நிறுத்தி அப்பொருளோடு பிறிதொரு பொருளே உவமித்தலும் உவமையெனப்படுமாயினும் அதனுற் பொருள் விளங்காமையின் அடுக்கிவரலுவமையாகிய அது கொள்ளப்படாதென்றும், சுண்ண மாகிய துகள்போலச் செய்யுளிற் பலவிடங்களிலும் சிதர்ந்து கிடக்கும் பொருள்கோள் வகையாகிய சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் மூன்றுமல்லாத நிலையில் உவமையையும் நிரலே நிறுத்திப் பொருளையும் நிரலே நிறுத்தி ஒப்புமை கூறின் அது நிரல் நிறையுவமம் என ஏற்றுக்கொள்ளப்படுமென்றும் இவ்வியலின் இறுதிக்கண் உவமை பற்றிய சில மரபுகள் தொகுத் துரைக்கப்பட்டன. ஆசிரியர் தொல்காப்பியனுர், பொருள் புலப்பாட்டினைச் செய்யும் கருவியென்ற முறையிலேயே உவமையின் பகுதிகளை இவ்வியலில் விரித்துக் கூறியுள்ளார். பிற்காலத்தில் வந்த தண்டியாசிரியர் முதலியோர் உவமையாகிய இதனைச் செய்யுட்கு அலங்காரமாகக் கொண்டு தாம் இயற்றிய அணியிலக்கண நூலில் இதனையும் ஒரலங்காரமாக்கி இலக்கணங் கூறியுள்ளார் கள் “தாமரை போலும் முகம் எனவரும் உவமத்தொடர், முகம் போலுந் தாமரை என மாறி, இடைநின்ற உவமவுருபு தொக்கு 'முகத்தாமரை எனவரின் அஃது உருவகம் என வேருேர் அணியாய் விடும் என்பது அன்னேர் துணியாகும். இவ்வாறே தன்மை, வேற்றுமை, வேற்றுப்பொருள் வைப்பு, ஒட்டு முதலிய அலங்காரங்கள் பலவும் தொல்காப்பியனர் கூறிய உவமப்பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப் பெற்றன என்பது நுண்ணுணர்வினுற் கூர்ந்து நோக்கும் வழி இனிது புலகுைம்.