பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#92 தொல்காப்பியம் நுதலியபொருள் 1. மாத்திரை:- எழுத்திற்குச் சொல்லிய மாத்திரைகளைச் செய்யுள் பொருந்தியமைந்த அளவு. மாத்திரையினது அளவு மாத்திரை யெனப்பட்டது. எழுத்திலக்கணத்தில் எழுத்திற்குக் கூறிய மாத்திரைகள் செய்யுளில் ஓசை நலம் சிதையாதபடி தத்தம் ஓசைகளைப் புலப் படுத்தி அளவுபெற நிற்றலே மாத்திரை யென்னும் உறுப்பாகும். மாத்திரை யளவாகிய இதனுலல்லது செய்யுட்களின் வேறுபாடு உணரலாகாமையின் என யுறுப்புக்களினும் இதனைச் சிறப்புறுப் பாக முற்கூறினர். 2. எழுத்தியல் வகை:- மேல் எழுத்ததிகாரத்துக் கூறிய எழுத்துக்களைச் செய்யுளுக்கமைய இயற்றிக்கொள்ளுங் கூறுபாடு அஃதாவது மேல் எழுத்ததிகாரத்தில் முப்பத்து மூன்றெழுத் துக்களையும் உயிர், குறில், நெடில், மெய், வலி, மெலி, இடை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என இயல்பு வகையாற் பத்தும், உயிர்மெய், உயிரளபெடை எனக் கூட்டவகையால் இரண்டும், ஐகாரக் குறுக்கம் ஒளகாரக் குறுக்கம் எனப் போலி வகையால் இரண்டும், யாழ்நூலாகிய இசைநூல் முறையான் வரும் ஒற்றிசை நீளுதல் ஒன்றும் ஆகப் பதினைந்து பெயரவாய்ப் பகுத்துரைத்த வகையாம். இவற்ருேடு மகரக் குறுக்கமும் கூட்டிப் பதிெைறழுத்தெனக் கொள்ளுதலும் உண்டு. மாத்திரை யளவும் எழுத்தியல் வகையும் ஆகிய இரண்டும் மேல் எழுத்ததிகாரத்திற் கூறிய இலக்கணத்திற் பிறழாமற் செய்யுளுக்கு உறுப்பாய் வரும் என்பர் ஆசிரியர். 3. அசை வகை:- முற்கூறிய எழுத்தாலாகிய அசை களின் கூறுபாடு. அவை இயலசையும் உரியசையும் என இரு திறப்படும். இவற்றின் கூறுபாடுகளே இவ்வியலில் 3 முதல் 10 வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விரித்துக்கூறியுள்ளார்.