பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தொல்காப்பியம் நுதலிய பொருள் என அலகு பெறுதலும் என இரு நிலைமையுமுடையதாய் இலச் கியங்களிற் பயிலக்கண்ட நச்சினர்க்கினியர், குற்றியலிகரம் ஒற்றியல்பிற்ருயும் ஒற்றல்லா உயிரெழுத்தின் இயல்பிற்ருயும் வரும் எனப் புதியதோர் விளக்கங் கூறினமை இவண் நினைக்கத் தகுவதாகும். முற்றியலுகரமும் மொழி சிதைந்து நேர்பசை நிரைபசை யென்று உரைக்கப்படாது; அஃது ஈற்றடி மருங்கின் தனியசை யாகி நிற்றலும் இல்லை என்பது இவ்வியல் எட்டாம் சூத்திரத் திற் கூறப்பட்ட விதியாகும். 'அங்கண் மதியம் அரவுவாய்ப் பட்டென" என்றவழி அரவு என்பது மொழி சிதையாமையின் நிரைபசை யாயிற்று எனவும், 'பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்" (நாலடி-200) என்றவழிப் பெரு-முத்தரையர்' என்ற தொடரைப் பெருமுத்தரையர்' எனப் பிரித்துச் சீராக்கின் மொழி சிதைதலின் நிரையசை யாகா தாயிற்று எனவும் உதாரணங்காட்டி விளக்குவர் இளம்பூரணர். இருவகை யுகரமோடு நேரும் நிரையும் இயையின் அவை நேர்பும் திரைபும் ஆம் என்ருர் ஆசிரியர். அவற்றுள் முற்றுகரம் ஈருகி நிற்குஞ்சொல் உலகத்து அரியவாயின. ஆதலின் புணர்ச்சி வகையால் ஈற்றின்கண் தோன்றிய உகரமே ஈண்டு நேர்பும் நிரை பும் ஆவன எனவும், அப்புணர்ச்சிக்கண்ணும் நாணு என்ருங்கு வரும் நிலைமொழித் தொழிலாகிய உகரமும் 'விழவு என்ருங்கு வரும் நிலைமொழி வீறுகெட்டு நின்ற உகரமுமே கொள்ளப் படுவன எனவும், வருமொழித் தொழிலாகிய ஒற்று நாணுத் தளேயாக விழவுத் தலைக்கொண்ட' என்ருங்கு நேர்பு நிரைபிற்கு