பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் Żół எனப்பட்டது, இயற்கை யளபெடை யென்று பெயரிட்டு வழங்கப் படும் செயற்கை யளபெடை சீர்நிலையாதல் செய்யுட்கே யுரிய வாறு போல இயற்கை யளபெடை அசைநிலையாகலுஞ் செய் யுட்கே யுரியது” என்பர் பேராசிரியர். இனி, ஒற்றளபெடைக்கண் கண் ண் தண்ண்ணெனக் கண்டும் கேட்டும் என்புழிக் கண்ண், என்பது சீர்நிலை யெய்தித் தேமாவாயிற்று தண்ண்ணென என்றவழித் தட்பத்தின் சிறப்புக் கூடுதற்காக இயற்சீர்க்கண்' ணகரவொற்றினை மிகக்கொடுத்து அளபெடுத்துச் செய்யுள் செய்யப்பட்டது. அது, மாசெல்சுரம் என வஞ்சிச் சீராவதனை ஆகற்க; பாதிரி என முன்னின்ற இயற்சீரேயாக என இதல்ை வழுவமைத்தாராயிற்று. மேற்சொல்லப்பட்ட ஈரசைச்சீர் பதினருேடு நான்கசையுங் கூட்டிப்பெருக்க மூவசைச்சீர் அறுபத்து நான்காம் மா,புலி,பாம்பு, களிறு என்பவற்றை முதலிலும்; வாழ், வரு, போகு, வழங்கு என்பவற்றை இடையிலும்; கான், நெறி, காடு, பொருப்பு என்பவற்றை இறுதியிலும் கூட்டி உறழ மூவசைச்சீர் அறுபத்து நான்காம். இவற்றுள் இயற்சீர் நான்கின்யின் நேரசை வந்த மூவசைச்சீர் நான்கும் வெண்பாவுரிச்சீர் எனப்படும். உதாரணம்: மாவாழ்கான், மாவருகான், புலிவாழ்கான், புலிவருகான் என வரும். வெண்பாவுரிச் சீராகிய இவை நான்குமல்லாத ஏனைய மூவசைச்சீர் அறுபதும் வஞ்சியுரிச்சீர் எனப்படும். வஞ்சியுரிச்சீர் வஞ்சிப்பாவினுளல்லது ஏனைய பாவினுள் வரப்பெரு. வஞ்சிப்பாவினுள் ஏனைய சீர்கள் வரப்பெறும். 1. மா, புலி, பாம்பு, களிறு என்பவற்றை முதலிலும் சேர்வரு, போகு, வழங்கு என்பவற்றை இடையிலும், வாய், சுரம், காடு, கடறு என்பவற்றை இறுதியிலும் வைத்து உறழ்ந்து அறுபத்து நான்கு மூவசைச் சீர்க்கு வாய்ப்பாடு கூறுதலும் உண்டு,