பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 203 தன்மை வேண்டுமிடத்து ஓரசைச் சீரை இயற்சீரே போலக் கொள்க என்பர் ஆசிரியர். ஓரசைச் சீராவன நாள், மலர், காசு, பிறப்பு என்பன. இவை சீராந்தன்மை பெற நிற்குமெனக் கொள்ளாக்கால் வெண்பாவின் ஈற்றடியை முச்சீரடியெனக் கொள்ளுதற்கு இடமில்லாது போய்விடும். இவற்றுள் நேர்பு, நிரைபு, என்னும் உரியசையிரண்டும் சீர்வகையான் அசைச்சீர் என வேருய் நிற்பினும் தளைவகை சிதையாத் தன்மைநோக்கித் தேமா, புளிம என்னும் இயற்சீர்ப்பாற் படுத்து அடக்கிக்கொள் ளப்படும் எனவும், இவை இயற்சீர்ப்பாற் படுமெனவே இவையும் கலிப்பாவிற்கு வி ல க் கு ண் டன எனவும் கருத்துரைப்பர் பேராசிரியர். வெண்சீரீற்றசை நிரையிறு போலும் என்பர் ஆசிரியர். "வெண்சீரீற்றசை தன் வழங்குமிடத்து இயற்சீரிறுதி நிரையசை போலும் என இதற்கு விளக்கங் கூறுவர் இளம்பூரணர். மேல் "கலித்தளை மருங்கிற் கடியவும் படாஅ' (செய்-23) என்புழி, அவ்வாசிரிய வுரிச்சீராற் கலித்தளையாம் எனக் கூறிய ஆசிரியர், கலிப்பாவிற்கு விலக்கப்பட்ட நேரீற்றியற்சீர் என்பதன் தொடர் பாக, வஞ்சி மருங்கினும்'(செய்-25),இசைநிலை நிறைய'(செய்-26), இயற் சீர்ப் பாற்படுத்து (செய்-27) என மூன்று சூத்திரத்தால் இடை புகுந்ததனைக் கூறி முடித்து முற்கூறிய கலித்தளை யதிகாரம் பற்றி வெண்சீரீற்றசை நிரையசை யியற்றே (செய்-28) என வரும் இச்சூத்திரத்தாற் கூறுகின்ருர் எனவும், வெண்சீர் பல தொடர்ந்து ஒரு கலியடியுள் நின்றவழி அவ்வெண்சீருள் ஈற்று நின்றசீரின் முதல்வந்த நேரசை மற்றை நிரை முதல் வெண்சீர் வந்து முன்னைய இரண்டுங் கலித்தளேயாயவாறுபோல கலித் தளையாம்' என்பதே இச்சூத்திரத்தின் பொருளெனவும், மேல் நின்ற தளைவகை சிதையாத் தன்மைக்கண்' என்பது மீண்டும் கூட்டியுரைக்கப்பட்டதெனவும், எனவே வெண்சீர்ப் பின்னர் நிரை வந்து தட்டலே சிறந்ததென்றும், நேர்வந்து தோன்றினும்