பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 தொல்காப்பியம் நுதலியபொருள் அவ்வோசையே பயந்து ஒரு நிகர்த்தா மென்றும் அவ்வாருங் கிாலும் இறுதிச்சீரின் முதலசையே நிரையியற்ருவதென்றும் ஆசிரியர் கூறினரெனவும், கலிப்பாவிற்கு வெண்சீர் ஒன்ருது வருதல் உரிமையுடையதெனவே வெண்பாவிற்கு ஒன்றிவரி னல்லது ஒன்ருது வருதல் யாண்டுமில்லை யென்பது உடம்படப் பட்ட தெனவும் இச்சூத்திரத்திற்கு விளக்கமுரைப்பர் பேராசிரியர். இனிய ஓசை பொருந்திவருமாயின் ஆசிரியவடிக்கண் வெண்சீரும் வரப்பெறும். வஞ்சியுரிச்சீரும் ஒரோவழி ஆசிரிய வடிக்கண் வரும் என்பர் ஆசிரியர். ஒரசைச்சீர் நான்கு ஈரசைச்சீர் பதினறு, மூவசைசீர் அறுபத்து நான்கு, ஆகச்சீர் எண்பத்து நான்கில் அசைச்சீர் நான்கெனவும், அது தளைவழங்கும்வழி இயற்சீர் ஒக்குமெனவும், ஈரசைச்சீர் பதினறினும் சிறப்புடைய இயற்சீர் நான்கும் சிறப்பி லியற்சீர் ஆறும் எனப் பத்தாமெனவும் ஆசிரியவுரீச்சீர் ஆறு எனவும், மூவசைச்சீர் அறுபத்து நான்கில் வெண்பாவுரிசீர் நான்கெனவும் ஏனைய அறுபதும் வஞ்சியுரிச்சீர் எனவும் இவ் வியல் முதல் 30-வரையுள்ள சூத்திரங்களிற் கூறப்பட்டமை காணலாம். 5. அடி:- மேற்கூறப்பட்ட சீர் இரண்டும் பலவும் தொடர்ந்து ஆவதோர் உறுப்பு அடியெனப்படும். இதன் இலக்கணத்தினை இவ்வியலில் 31-முதல் 73-வரையுள்ள சூத்திரங் களால் ஆசிரியர் விரித்துரைப்பர். அடியென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது நாற் சீரடியே என்பர் ஆசிரியர். இருசீராலும் முச்சீராலும் ஐஞ்சீராலும் அறுசீர் 1. முன்னர் வெண்சீரினே இன்பா நேரடிக்கு ஒருங்கு நிலையில், (செய்யுளியல்-22) என விலக்கியது கட்டளையடிக்கென் பதும், இங்கு (செய்யுளியல்-29) வெண்சீர் வருமென்றது கட்டளை யடிக்கு அன்றென்பதும் பேராசிரியர் கருத்தாகும்.