பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 தொல்காப்பியம் நுதலியபொருள் ஒன்பதெழுத்தளவும் வந்த மூன்றடியும் சிந்தடியென்றும், பத் தெழுத்து முதல் பதின்ைகெழுத்தளவும் வந்த ஐந்தடியும் நேரடி யென்றும், பதினைந்தெழுத்து முதல் பதினேழெழுத்தளவும் அமைந்த மூன்றடியும், நெடிலடியென்றும், பதினெட்டெழுத்து முதல் இருபதெழுத்தளவும் உயர்ந்து மூன்றடியும் கழிநெடிலடி யென்றும் எழுத்தளவினுற் பெயர் கூறி வழங்குவர் தொல் காப்பியர். இப்பெயர் வழக்கம் தொல்காப்பியனர் காலத்துக்கு முற்பட்ட யாப்பியல் மரபென்பது, இவ்வியலில் 35 முதல் 39 வரை யுள்ள நூற்பாக்களில் என்ப, மொழிப' என அவ்வாசிரியர் தம் முன்னேர் கூற்ருகக் கொண்டெடுத்து மொழிதலால் இனிது விளங்கும். மேல், எழுத்தெண்ணி வகுத்துரைக்கப்பட்ட கட்டளையடிக் கண் உள்ள சீரினது நிலைமை ஐந்தெழுத்தின் மேற்பட அமைதல் இல்லையெனவும், நேர் நிரையென்னும் இயலசைகளால் இயன்ற வஞ்சிச் சீராயின் ஆறெழுத்தளவினதாய் நிற்றலும் உண்டெனவும் இவ்வியல் 40 ஆம் சூத்திரம் கூறும். வஞ்சிச்சீர் முச்சீரடியாக வல்லது நாற்சீரடியாக வருதல் இலக்கணமன்ருதலின் இருப தெழுத்தின் மிக்க நாற் சீரடிப்பா இல்லையென்பது இச்சூத்திரத் தால் உய்த்துணரப்படும். நாலெழுத்து முதல் இருபதெழுத்தளவும் வகுத்துரைக்கப் பட்ட பதினேழ் நிலத்தினவாகிய ஐவகையடிகளும் ஒரடிக்கோரடி எழுத்தளவு குறைந்தும் மிகுந்தும் வருவனவாயினும், அவ்வடி 1. நேரடியை அளவடியென வழங்குவர் உரையாசிரியர். 2. மக்களுள் திரக் குறியானேக் குறளனென்றும், அவனின் நெடியானேச் சிந்தனென்றும், ஒப்பமைந்தானை அளவிற் பட்டா னென்றும், அவனின் நெடியானே நெடியானென்றும், அவனின் நெடியானைக் கழியநேடியானென்றுஞ் சொல்லுப. அவை போல் இப்பெயர்களேக் கொள்க’ எனக் குறளடி முதலிய இப்பெயர்கள் காரணப் பெயர்களாதலேப் பேராசிரியர் விளக்கியுள்ளார்.