பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德量4 தொல்காப்பியம் நுதலியபொருள் றிருபத்தைந்தாம். இவற்றின் விரிவெல்லாம் பேராசிரியருரையிற் கண்டு தெளியத்தக்கனவாகும். இனி இச்சூத்திரத்திலுள்ள எழுபது வகையின் வழுவிலவாகி என்ற தொடர்க்கு எழுபது தளேவழுவின் நீங்கி எனப் பொருள் கொண்டு, "எழுபது தளை வழுவாவன: ஆசிரிய நிலம் பதினே ழுள்ளும் வெண்டனை தட்பப் பதினேழும், கலித்தளை தட்பப் பதினேழுமாய், ஆசிரியப்பாவிற்கு முப்பத்துநான்கு தளைவழுவாம். வெள்ளே நிலம் பத்தினுள்ளும் ஆசிரியத் தளை தட்பப் பத்தும், கலித்தளே தட்பப் பத்துமாய், வெண்பாவிற்கு இருபது தளே வழுவாம். கலிநிலம் எட்டினுள்ளும் வெண்டளே தட்ப எட்டும், ஆசிரியத் தளைதட்ப எட்டுமாய்க் கலிப்பாவிற்குப் பதினறு தளை வழுவாம். இவை யெல்லாந் தொகுப்ப எழுபது தளைவழுவாம்.” எனக் கூறுவர் ஒரு சாராசிரியர். அளவடி ஐந்தும் சிந்தடி மூன்றுமாக வெண்பா எட்டு நிலமே பெறும் என்பது, அளவும் சிந்தும் வெள்ளைக்குரிய (செய்-58) எனவரும் சிறப்பு விதியால் எடுத்துரைக்கப்படுதலின், அதற்குமேல் இரண்டு நிலன் ஏற்றி வெள்ளைநிலம் பத்து எனக் கொண்டு கூறும் இவ்வுரை பொருந்தாதென்பது பேராசிரியர் கருத்தாகும். ஆசிரியர் தொல்காப்பியனர் இந்நூல் செய்த காலத்தில் இவ்வாறு எழுத்தளவிஞலமைந்த கட்டளையடிகளும் சீர் வகையடி களும் ஆகிய இரு திறமும் அமையச் செய்யுள் இயற்றப்பெற்றன வென்றும் அவர்க்குப் பின் கடைச் சங்க காலத்திற் கட்டளையடி களாற் செய்யுளியற்றும் பழக்கம் அருகி மறைந்த தென்றும் கருத வேண்டியுளது. இந்நூல் செய்த காலத்தில் தலைச் சங்கத் தாரும் இடைச் சங்கத்தாரும் கட்டளையடி பயின்றுவரச் செய்யுள் செய்தாரென்பது இச்சூத்திரங்களாற் பெறுதும், பின்பு கடைச் சங்கத்தார்க்கு அஃது அரிதாகலிற் சீர்வகையடி பயிலச் செய்யுள் 1. யாப்பருங்கல விருத்தி (பவானந்தர் பதிப்பு) பக்கம் 430, 431.