பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 219 வகுக்கப்படும் கட்டளை யடிக்கேயன்றி இக்காலத்திற் பெரு வழக்கினதாயுள்ள சீர்வகை யடிக்கும் இவ்வியலில் இலக்கணங் கூறியுள்ளமை நன்கு புலனும், ஆசிரியப்பாவின் ஈற்றயலடி முச்சீரடியாக வருதல் உண்டு. மேற்கூறிய முச்சீரடி ஆசிரியப்பாவினிடையிலும் வரப்பெறும். முச்சீரடி கலிப்பாவினுள் நிரம்பவும் நிற்கும். வஞ்சிப்பாவின் இறுதி, ஆசிரியப்பாவின் இறுதி போன்று முடியும் என இவ்வியல் 65 முதல் 68 வரையுள்ள சூத்திரங்களில் விரித்துரைப்பர் ஆசிரியர். வஞ்சிப்பாவின் இறுதிப்பகுதி ஆசிரியப்பாவிற்குரிய சீருந்தளையும் பெற்று அதன் இயல்பினுல் முடியும் எனவே அதன் ஈற்றயலடி முச்சீரான் வருதலும் நாற்சீரான் வருதலும் கொள்ளப் படும். வெண்பாவின் ஈற்றடி மூன்று சீரையுடையதாகும். அதன்கண் இறுதிச்சீர் அசைச் சீராய் வரும். வெண்பாவின் இறுதிச் சீரின் அயற்சீர் நேரீற் றியற்சீராயின் நிரையசையும் நிரைபு அசையும் தண்மையைப் பெற்று முடியும்; ஈற்றயற்சீர் நிரையிற் றியற் சீராயின் நேரசையும் நேர்பு அசையும் சீராந் தன்மை யெய்தி முடியும் என இவ்வியல் 69 முதல் 71 வரையுள்ள சூத்திரங்களாற் குறிப்பிடுவர் ஆசிரியர். வெண்சீரின் இறுதியிலுள்ள நேரசை யானது, இயற்சீரிறுதி நிரையசை போலும்' என முன்னர்க் கூறினமையால் வெண்பாவுரிச்சீர் ஈற்றயற் சீராய் நிற்ப, அதன் முன் நேரசையும் நேர்பு அசையும் அசைச் சீராய் வந்து முடிதலும் கொள்ளப்படும். ஈற்றயலடி முச்சீராய் வரும் ஆசிரிய முடியே கலிப்பாவிற்கும் முடிபாகும். கலிப்பா, வெண்பாவின் இயல்பினுலும் பண்புற முடிதல் உண்டு’ என்பர் ஆசிரியர். "எழுசீரிறுதியாசிரியம் 1. செய்யுளியல் 28-ஆம் சூத்திரம். 2.3. ஆசிரிய வீறும் வெண்பாவிறுமாகிக் கலிப்பாவினை