பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 22 : 7. மரபு: மரபு என்பது காலம் இடம் முதலியன பற்றி வழக்கு மாறுபடினும் அத் திரிபுக்கு ஏற்ப வழுப்படாமற் செய்வ தோர் செய்கை. மரபாவது, இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வட சொல் என்னும் நாற்சொல்லின் இயற்கையானே யாப்பின் வழிப் பொருந்தி யமைவது என்பர் ஆசிரியர். குறித்த பொருளை முடியச் சொல்தொடுக்குங்கால், பெயர், வினை, இடை, உரி ஆகிய இயற்சொல்லானும், ஏனைத் திரிசொல் திசைச்சொல் வட சொல்லானும் ஏழுவகை வழுவும் படாமற் புணர்ப்பது மரபு எனவும், அவற்றுள் இயற்சொல் மரபாவது சொல்லதிகார இலக்கணத்தொடு பொருந்துதல். திரிசொல் மரபாவது தமிழ் நாட்டகத்தும் பலவகை நாட்டினும் தத் தமக் குரித்தாக வழங்கும் மரபு. திசைச்சொல் மரபாவது செந்தமிழ் சூழ்ந்த பன்னிரு நிலத்தினும் வழங்கும் மரபு. வடசொல் மரபா வது திரிந்த வகையாகிய சொல்மரபு எனவும் விளக்குவர் இளம் பூரணர். 'மரபாவது, வழக்கெனவுஞ் செய்யுளெனவும் இடை தெரி யாமல் (வேறு பிரித்துணர வொண்ணுதபடி) ஒரு வாய்பாட்டான் வழக்குஞ் செய்யுளுமாகி, ஒரு சொற்ருெடரினைச் சொல்லியது போலச் செய்யுள் செய்தல்" எனவும், இங்ங்ணம் வழக்கியலை யாப்பு வழிப்படுத்தல் மரபாம் எனவே சொல்லும் பொருளும் அவ்வக் காலத்தார் வழங்குமாற்ருனே செய்யுள் செய்வது என்ப தாயிற்று' எனவும், 'ஒருகாலத்து வழங்கப்பட்ட சொல் ஒரு காலத்து இலவாகலும் பொருள் வேறுபடுதலும் உடைய, இனி, பொருளும் இவ்வாறே காலத்தானும் இடத்தானும் வேறுபடுத லுடைய, ஒரு காலத்து அணியும் கோலமும் ஒரு காலத்து வழங் 1. தமிழ் நாட்டெல்லேயுள் அடங்கிய பலவகை உள்நாடு களிலும் என்பது இத்தொடரின் பொருளாகும்.