பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 தொல்காப்பியம் நுதலியபொருள் காதனவுள. ஓரிடத்து நிகழும் பொருள் மற்றேரிடத்து நிகழா தனவுமுள. அவ்வக் காலமும் இடனும் பற்றி ஏற்றவாற்றற் செய் யுள் செய்ய வேண்டுமென்பது இதனது பயன்’ எனவும். 'மற்று, பாட்டுரை நூலே என ஏழுவகை வகுத்த பகுதியையுஞ் செய் யுட்கு மரபென மேற்கூறினன்; அதஞனே இவ்வேழு வகையா னன்றி ஆரியர் வேண்டுமாற்ருனும் பிறபாடைமாக்கள் வேண்டுங் கட்டளேயானும் தமிழ்ச் செய்யுள் செய்தல் மரபன்று” எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் நுண்ணுதின் உணர்ந்து கொள்ளத் தக்க சிறப்புடையதாகும். 8. தூக்கு:- துக்கென்பது, பா க் க ளே அடிதோறுந் துணித்து நிறுத்துதலாகிய ஓசை விகற்பமாகும். துக்கு என்னும் இச்சொல், துணித்தல் நிறுத்தல் பாடுதல் என்ற பொருளில் வழங்குவதாகலின், பாக்சளை அடிதோறும் துணித்து நிறுத்தி இசைத்தலாகிய ஓசை விகற்பத்தைக் குறிக்கும் பெயராயிற்று. நிறுத்தற்குரிய பொருள்களாகிய பொன், வெள்ளி முதலிய வற்றுள் ஒன்றைப் பெற்ருலல்லது, அப்பொருளைத் தொடியும் துலாமும் எனத் துலேக் கோலால் தூக்கி அளந்து அறுதியிடுதல் இயலாது; அதுபோலவே அளக்கப்படு பொருளாகிய பாக்களே யின்றி அவற்றை யளந்து நிறுத்துதலாகிய துக்கென்னும் ஒசை யினை அறுதியிட்டு உணர்த்தலும் இயலாத செயலாம். எனவே பாவொடு புணர்த்தே துக்கென்னும் ஒசை விகற்பத்தினை ஆசிரியர் ஈண்டு உணர்த்துகின்ருர். அகவல் என்று வழங்கப்படும் ஒசை ஆசிரியப்பாவிற்கு உரியதாகும். 1. அச்சிடப்பெற்று வழங்கும் பேராசிரியர் உரைப் புத்தகத் தில் இச்சொல் ஆசிரியர்' என்றிருத்தல் பிழையென்பதும், இஃது ‘ஆரியர்' என்றே இருத்தல் வேண்டுமென்பதும், “ இனித் தமிழ் நூற்கண் வழுவமைத்தவாறன்றி ஆரியரும் பிற பாடைமாக்களும் வேண்டுமாற்ருற் றமிழ்ச் செய்யுள் செய்தல் மரபன்றென் றுணர்க’ எனவரும் நச்சிஞர்க்கினியர் உரைப் பகுதியால் நன்கு விளங்கும் .