பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 19 மரபினராதலாற் பார்க்கவர் எனவும் வழக்கப்படுவரென்றும், ஆகவே தொல்காப்பியர்ை, பல்காப்பியர்ை முதலிய புலவர்களும் பார்க்கவ அல்லது காவ்ய கோத்திரத்தவராதல் வேண்டு மென்றும் கூறுவாருமுளர். காவ்ய என்ற பெயரால் ஒரு கோத்திரம் வடநூல்கள் சிலவற்றிற் குறிக்கப்படுவது கொண்டு ஓசை யொற்றுமை சிறிதே கருதித் தமிழகத்திற் கோத்திரங்கள் தோன்ருத தொன்மைக் காலத்தவராகிய தொல்காப்பியனுரைக் காவிய கோத்திரத்தவரெனத் துணிந்து கூறுதல் ஏற்புடைய தன்ரும். நந்திவர்ம பல்லவமன்னன் வழங்கிய தண்ட ந் தோட்டம் பட்டயத்தில் பார்க்கவ கோத்திரம் வேருகவும் காவிய கோத்திரமாகிய கபி கோத்திரம் வேருகவும் குறிக்கப்பட்டதனை நோக்குங்கால் இவ்விரு பெயர்களும் வேறுவேறு கோத்திரத் தினையே குறிப்பன என்பது தெளியப்படும். தொல்காப்பியனர் அகத்திய முனிவரால் வடநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு அழைத்துக்கொண்டு வரப்பெற்றவர் என்னுங் கதையினை நச்சினர்க்கினியருரையில் தான் முதன்முதற் காண்கின்ருேம். ஆசிரியர் தொல்காப்பியனரைச் சம தக்கினியின் புதல்வரென்றும் திரணதுரமாக்கினி யென்னும் இயற்பெயருடையாரென்றும் நச்சினர்க்கினியர் குறித்துள்ளார்.” வரலாற்ருதரவின்றிப் பிற் காலத்தவராற் புனைந்துரைக்கப்பட்ட இக்கதையின்படி பார்த்தா லும் பார்க்கவ கோத்திரத்தவரான சமதக்கினியின் புதல்வரைக் காவிய கோத்திரத்தவரெனக் கூறுதல் பொருந்தாமை புலனும். இனி, காவியகுலம் என்பதோர் பழைய குடிப்பெயர் வட நூல்களில் வழங்கப்பட்டுளதென்றும், காவியர் கவியின் (சுக்கிரனது) வழியினரென்றும், பிருகு மகாரிஷியின் பத்தினியைக் காவியமாதா என வான்மீகி முனிவர் வழங்குதலால் பிருகு வமிசத்திற் பிறந்த சமதக்கினியின் புதல்வரான திரணதுமாக் 1. தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி, பக்கம் 1. 2. தொல், எழுத்து, நச்சினுர்க்கினியம், சிறப்புப்பாயிரவுரை.