பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 225 பொழிப்பு, ஒருஉ செந்தொடை என அமைந்தவற்றை ஆராயின் அவையும் தொடைப்பாகுபாடாம். நிரல் நிறுத்தமைத்தலும்’ இரட்டையாப்பும் மேற்கூறிய தொடையியல்பினவாய் முடியும். அடிதொறும் முதலெழுத்து ஒத்தமைவது மோனைத் தொட்ை யாகும். (முதலெழுத்து அளவொத்து நிற்க) இரண்டாமெழுத்து ஒன்றின் எதுகையாகும். மோனைத் தொடைக்கும் எதுகைத் தொடைக்கும் எடுத்த எழுத்தே வருதலன்றி வருக்கவெழுத்தும் உரியனவாகும். சொல்லினுலாவது பொருளினுலாவது மாறு: படத் தொடுப்பது முரண்தொடை எனப்படும். ஈற்றெழுத்து ஒன்றிவரின் இயைபுத் தொடையாம். அளபெடை வரத் தொடுப் பது அளபெடைத் தொடையாகும். இவ்வைந்தும் பாட்டின் அடி தொறும் வருதற்குரிய தொடைகளாகும். ஒருசீர் இடையிட்டு (முதற்சீரும் முன்ருஞ்சீரும்) எதுகையாய் வரின் அதனைப் பொழிப்புத் தொடையெனக் கூறுவர் புலவர். இரண்டு சீர் இடையிட்டு (முதற் சீரிலும் நான்காஞ்சீரிலும் மோனை முதலாயின வர)த் தொடுப்பது ஒருஉத் தொடையாம், மேற்சொல்லப்பட்ட தொடையும் தொடை விகற்பமும் போலாது வேறுபடத் தொடுப்பது செந்தொடையாம் என்பர். 1. நிரனிறைத் தொடையாவது, பொருளே நிரலே நிறுத்தி அம்முறையே பயனேயுஞ் சேர நிறுத்துதல் , 2. இரட்டைத் தொடையாவது, ஒரடி முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது. 3. எதுகையென ஓதினராயினும் "வந்ததுகொண்டு வாரா தது முடித்தல்’ என்பதல்ை மோனே இயைபு முரண் அளபெடை என்பனவும் பெரழிப்புத் தொடையாமென்று கொள்க’ என இளம் பூரணரும், இங்ங்ணம் எதுகையைப் புலப்பட வைத்து ஏனேய அருத்தா பத்தியாற் கூறியது, எல்லாவற்றிலும் எதுகை சிறந்து தோன்றுதல் பற்றி” என நச்சிகுர்க்கினியரும் கூறும் விளக்கம் இங்கு நோக்கத்தக்கனவாம். 4. செயற்கை வகையானன்றி இயற்கையிலே பூந்துணராந் பொலிந்து தோன்றும் கொன்றையும் கடம்பும் போல நின்றவாறே நின்று இயற்கை வகையால் தொடைப்பொலிவு செய்தல்பற்றிச்