பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 23 i மூவாயிரத் தறுநூற்றுத் தொண்ணுற்றுருென்பது தொடையாம்' என்பது யாப்பருங்கல விருத்தியாசிரியர் கூறிய விளக்கமாகும். இனி, இச்சூத்திரத்திற்குத் தொண்டுதலையிட்ட பத்துக் குறை யெழுநூற் ருென்ப.து எனப் பாடங்கொண்டு பேராசிரிய ரும் நச்சினர்க்கினியரும் வேறுவேறு பொருளுரைப்பர். தொண்டு தலையிட்ட-ஒன்பதுடன் கூடிய பத்துக்குறை யெழுநூற்றென் பஃது என்றது அறுநூற்றுத் தொண்ணுற் ருென்பது. ஒன்ப துடன் கூடிய அறுநூற்றுத் தொண்ணுற் ருென்பது எனவே எழுநூற்றெட்டு என்பது பொருள். ஆகவே தொடைவகை பதின் மூவாயிரத் தெழுநூற்றெட்டு என்பது பேராசிரியர் கொள்கை யாகும். "தொண்டு தலையிட்ட' என்ற தொடர், ஒன்பதாலே பெருக்கின எனப் பொருள்படுமெனவும், பத்துக் குறை யெழு நூற்ருென்பது (அறுநூற்றுத் தொண்ணுற் ருென்பது) என்ற 4. தொல்காப்பிய வுரையாசிரிய ரெல்லார்க்கும் முற்பட்ட வராகிய இளம்பூரண ருரையிலும் அவர் காலத்தை யொட்டி யமைந்த யாப்பருங்கல விருத்தியிலும் இச்சூத்திரத்திற்கு "எழு நூற்ருென்பஃது என்ற பாடம் கொள்ளபடவில்லை. எனவே இப்பாடம் பேராசிரியர் கூறுமாறு பழம்பாடம் எனத் துணிந் துரைத்தற்கு இடமில்லே. அன்றியும் எழுநூற்றெட்டு எனச் சொல்ல வேண்டிய தொகையினைத் தொண்டு தலேயிட்ட பத்துக் குறை யெழுநூற்ருென்பஃது என இவ்வாறு அரிதும் பெரிதுமாகச் சூத்திர ஞ் செய்ய வேண்டிய இன்றியாமையும் இல்லே. ஆசிரியர் தொல்காப்பியர்ை. எழுத்துக்கள் முப்பத்து மூன்று என்று பொருள் பட ‘மூன்று தலேயிட்ட முப்பத்திற்றெழுத்தின்’ எனவும் மொழி முதலாம் எழுத்துக்கள் இருபத்திரண்டு என்ற பொருள்பட "இரண்டு தலையிட்ட முதலாகிருபஃது எனவும் புணரியல் முதற் சூத்திரத்திற் கூறிய தொடர்களேக் கூர்ந்து நோக்குங்கால். 'தொண்டு தலேயிட்ட” எனவரும் இத்தொடர், 'ஒன்பது என்னும் எண்ணினே முடியும் எண்ணுகவுடைய’ என்ற பொருளிலேயே இங்கு ஆளப்பட்டிருத்தல் வேண்டுமென்பதும் பேராசிரியர் கருது மாறு ஒன்பதுடன் கூட்டிய' என்ற பொருளிலோ நச்சிஞர்க் கினியர் கருதுமாறு ஒன்பதாலே பெருக்கின என்ற பொருளிலோ இங்கு ஆளப்பட்டதன்லு என்பதும் நன்கு புலம்ை.