பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 தொல்காப்பியம் துதலியபொருள் வருவதே செய்யுள் என்பது விளங்க நோக்கென்னும் உறுப்பினை ஈண்டுக் கூறினர் என்பர் பேராசிரியர். இவ்வாறு மாத்திரை முதலாக அடி நிரம்புந் துணையும் நோக்கியுணர் தற்குக் கருவி யாகிய சொல்லும் பொருளும் எல்லாம் அமைய வந்த நோக் கென்னும் உறுப்பினை 'முல்லை வைந்நூனை தோன்ற எனவரும் அகநானூற்றுப் பாடலிற் பேராசிரியர் விளக்கிக் காட்டிய திறம் அறிந்து மகிழத்தக்கதாகும். 11. பா:- பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லுந் தெரியாமற் பாடம் ஒதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இஃது இன்ன செய்யுளென்று உணர்தற்கு எதுவாகிப் பரந்துபட்டுச் செல்வ தோர் ஓசை என்பர் பேராசிரியர். ஆசிரியர் தொல்காப்பியனர் இவ்வியல் 101 முதல் 149 முடியவுள்ள நூற்பாக்களால் பாவின் இலக்கணத்தை விரித்துக் கூறிரிள்ளார். பாவினது வகையை விரிக்குங்காலத்து ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என நான்கியல்பினை யுடைத்தென்பர். அப் பாக்கள் நான்கும் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று முதற்பொருட்கும் உரியன. மேல் நால் வகையாக விரிந்த பாவினது பகுதியை உண்மைத் தன்மை நோக்கித் தொகுத் துரைப்பின் ஆசிரியப்பா, வெண்பா என இரண்டாயடங்கும். அவற்றுள் ஆசிரியத்தின் நடையினை யுடையதாய் வஞ்சிப்பா அடங்கும். வெண்பாவின் நடையினை யுடையதாய்க் கலிப்பா அடங்கும். வாழ்த்தியல் வகை மேற்கூறிய நான்கு பாவிற்கும் உரிய தாகும். நின்னல் வழிபடப்பெறுந் தெய்வம் நின்சீனப் புறங் 1. பண்புற என்ற தனுல் ஆசிரியப்பாவும் வெண்பாவும் இயல்பெனவும் ஒழிந்தன. விகாரமெனவும கொள்க’ என்பர் பேராசிரியர், - 2. வாழ்த்தியல் வகையென்றது, தேவரை வாழ்த்துதலும்