பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 தொல்காப்பியம் நுதலியபொருள் நெடுவெண் பாட்டும் குறுவெண் பாட்டும் ஒத்தவையும் (சமனிலை வெண் பாட்டும்) என மூவகையாம். நெடுவெண் பாட்டு என்பது, நான்கின் மிக்க அடிகளே யுடையதாய் வரும் வெண்பாவாகிய பாட்டாகும். ஐந்தடி முதல் பன்னிரண்டடி யளவும் வரும் நெடுவெண் பாட்டைப் பிற்காலத் தார் பஃருெடை வெண்பா என வழங்குவர். ஒருஉத் தொடை பெற்றுவரும் பஃருெடை வெண்பாவினை நேரிசைப் பஃருெடை யெனவும், ஒருஉத் தொடையின்றிவரும் பஃருெடையினை இன்னிசைப் பஃருெடை யெனவும் வழங்குதல் உண்டு. குறுவெண் பாட்டாவது அளவிற்குறிய பாட்டு. இஃது இரண் டடியாலும் மூன்றடியாலும் வரும். இரண்டடியும் ஒருதொடை யான் வருவன குறள்வெண்பா எனவும், விகற்பத்தொடையான் வருவன விகற்பக்குறள் வெண்பா எனவும் கூறுவர். மூன்றடியும் ஒருதொடையான் ஒத்து வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. வேறுபட்ட தொடையான் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா, கைக்கிளைப் பொருண்மைத்தாக வரும் வெண்பா கைக்கிளை வெண்பா எனவும் அங்கதப் பொருண்மைத்தாக வரும் வெண்பா அங்கத வெண்பா எனவும் வழங்கப்படும். பரிபாட்டாவது பரிந்து (பல வடிகளும் ஏற்று) வரும் பாட்டாகும். அஃதாவது ஒரு வெண்பாவாக வருதலின்றிப் பல வுறுப்புக்களோடு தொடர்ந்து முற்றுப்பெறுவது. அங்கதம் என்பது வசை, அங்கதச் செய்யுள் அங்கதமாகிய செய்யுள் எனப் பண்புத் தொகையாம். ஒத்தவை என்பன, அளவாலும பொருளாலும் இனத்தாலும் வேறு படுக்கப்படாத சமனிலை வெண்பாக்களாம். அவையாவன