பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 24h "பல கோடுபட அடுக்கி யுடுக்கும் உடையினைக் கொச் சகம்’ என்பவாகலின், அதுபோலச் சிறியவும் பெரியவும் விராஅய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் வருஞ் செய்யுளேக் கொச்சக மென்ருர்” என்பர் நச்சிஞர்க்கினியர். "அராகம் என்பது, ஈரடியானும் பலவடியானும் குற்றெழுத்து நெருங்கி வரத்தொடுப்பது” என இளம்பூரணரும், குறிலிணை பயின்ற அடி அராக மெனப்படும்" எனப் பேராசிரியரும் கூறுப. சுரிதகம் என்பது, ஆசிரிய வியலினுலாவது வெண்பா வியலிலைாவது பாட்டிற் கருதிய பொருளே முடித்து நிற்பதாகும். இதனை அடக்கியல்' எனவும் வழங்குவர். "எருத்தென்பது இரண்டடி யிழிபாகப் பத்தடிப் பெருமையாக வருவதோர் உறுப்பு. பாட்டிற்கு முகம் தரவாதலானும், கால் சுரிதகமாதலானும், இடைநிலைப் பாட்டாகிய தாழிசையும் கொச்சகமும் அராகமும் கொள்ளக் கிடத்தலின் எருத்தென்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாதலான் அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டுமென்று கொள்க' என்பர் இளம்பூரணர். எருத்து என்பது தரவு என்பர் பேராசிரியர். சொற்சீரடியும் முடுகியலடியும் பரிபாடற்கு உரியவாகும். பாட்டின்றித் தொடுக்கப்படும் கட்டுரைக்கண் சொல்லுமாறு போல எண்ளுேடு’ கூடியும் முற்றிய நாற்சீரடியின்றி முச்சீரடி 1. இக்காலத்து இது மகளிர்க் குரியதாய்க் கொய்சகம் என்று வழங்குவதாயிற்று. 2. முடுகியலாவது ஐந்தடியானும் ஆற டியானும் ஏழடியானும் குற்றெழுத்துப் பயிலத் தொடுப்பது என்பர் இளம்பூரணர். முடுகியலடி யென்பது, முடுகியலோடு விராஅய்த் தொடர்ந் தொன் ருகிய வெண்பாவடி யென்பர் பேராசிரியர். 3. "எண்ணெண்பது, ஈரடியாற் பலவாகியும் ஒரடியாற் பலவாகியும் வருதல் என இளம்பூரணரும், எண்ணுதற் பொருள் எனப் பேராசிரியரும் கொள்வர்.