பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 தொல்காப்பியம் துதலியபொருள் யானும் இருசீரடியானும் குறைவாகிய சீரை யுடைத்தாகியும். ஒழிந்த அசையினை யுடைத்தாகியும், ஒரு சீரின் பின்னே பிறி தொருசீர் வரத் தொடுக்கப்படாது ஒரசை வரத் தொடுத்தும் சொல்தானே சீராந் தன்மையைப் பெற்று நிற்றல் சொற்சீரடி யின் இயல்பாகும். அங்கதமாகிய வசைச் செய்யுளைக் குற்றமற ஆராயின் செம்பொருளங்கதமும், பழிகரப்பு அங்கதமும் என இருவகையினை யுடையதாகும். வாய்காவாது கூறப்படும் செம்பொருளங்கதம் வசையெனப் பெயர்பெறும். தான் மொழியும் மொழியை மறைத்து மொழியின், அது பழிகரப்பெனப் பெயர்பெறும். ஈண்டு தம்மால் வேண்டப்பட்ட செய்யுள் இரண்டு வகையென்று சொல்லுவர் புலவர். புகழொடும் பொருளொடும் புணரவரின் செவியுறைச் செய்யுள் என்று ச்ொல்லுவர். வசையொடும் நசை யொடும் புணர்ந்த செய்யுள் அங்கதச் செய்யுள் எனப்பெயர் பெறும். இனி, கலிப்பா ஒத்தாழிசைக் கலி, கலிவெண்பாட்டு, கொச்சகம், உறழ்கலி என நான்கு வகைப்படும். அவற்றுள் ஒத்தாழிசைக் கலி இரண்டு வகைப்படும். மேற்கூறிய ஒத்தாழிசைக் கலி யிரண்டனுள் ஒன்று, இடை நிலைப் பாட்டு(தாழிசை), தரவு, போக்கு(சுரிதகம்), அடைநிலைக் கிளவி (தனிச்சொல்) என்னும் நான்குறுப்புடையதாகப் பயின்று வரும்." 1. புகழொடும்’ என்பது இளம்பூரணர் கொண்ட பாடம். "துகளொடும் எனப் பேராசிரியரும் நச்சினர்க்கினியரும் பாடங் கொண்டனர். துகள்-குற்றம். துகளொடு புணர்ந்தது செவியுறைச் செய்யுளாகாமை தெளிக. 2. இங்குச் சிறப்புடைமை கருதித் தாழிசையை முற்கூறின ரேனும், தரவு, தாழிசை, தனிச் சொல், சுரிதகம் என இம்முறை யால் வருதலே ஒத்தாழிசைக் கலியின் அமைப்பென அறிக.