பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 245 வரும் அடக்கியல் வாரம், தரவோடு ஒத்த இலக்கணத்தது, எண் என்பது, முதல் தொடுத்த உறுப்புப் பெருகிப் பின் தொடுக்கும் உறுப்புச் சுருங்கிப் பலவாய் வருவது. மேற் சொல்லப்பட்ட எண், ஒரோவொன்று இடையொழிந்து வருதல் குற்றமாகாது; சின்னம் என்பதொன்றும் ஒழிந்து நில்லாத பொழுது" என்பர் ஆசிரியர். பேராசிரியரும் நச்சினர்க்கினியரும். எனவே வண்ணக ஒத்தாழி சைக்குரிய தரவு, நான்கும் ஆறும் எட்டும் ஆக இவ்வாறு இரட்டைபட்ட அடிகளால் வருதலன்றி, ஐந்தும் ஏழும் ஒன்பதும் ஆக இவ்வாறு ஒற்றைப்பட்ட அடிகளால் வாராதென்பது பேராசி ரியர் முதலியோர் கருத்தாகும். 1. அடக்கும் இயல்பிற்ருகிய வாரம்; என்றது, சுரிதகத்தினே. முன்னர்ப் பலவகையாற் புகழப்பட்ட தெய்வத்தினே ஒரு பெயர் கொடுத்து அடக்கி நிற்றலின் அடக்கியல் எனவும், தெய்வக் கூற்றின் மக்களைப் புகழ்ந்த அடி மிகுமாகலின் வாரம் எனவும் சுரிதகத்திற்குப் பெயர் கூறினர் என்பர் பேராசிரியர். 2. 'எனவே இரண்டடி யிரண்டும், ஒரடி நான்கும், இருசீர் எட்டும், ஒருசீர் பதினுறும் ஆகி எண்பல்கும் என்பது. இருசீர் குறளடியுமாகலின் ஒருசீரான் வருவன சிற்றெண்ணெனவே படும்; ஆகவே, ஒழிந்த எண் மூன்றும் தலேயெண்ணும் இடையெண்ணும் கடையெண்ணும் என் மூன்றுங் கூடியே எண்ணென்றற்குரியவன் யின. இது நோக்கிப் போலும், எண்ணென்று அடக்காது, "சின்னம் அல்லாக்காலே’ என ஒரு சிரினே (ச்சின் னம் என்று) வேறுபடுத்து மேற்கூறுகின்றது என்பது. இனி அளவடியினே நாட்டியே முதற்றெடை பெருகிச் சுருங்கும்’ என்றமையின், அளவடியிற் சுருங்கின. இருசிரும் ஒரோவழிச் சின்னமெனப்படும்’ என்பர் பேராசிரியர். - '" இனி, ஈரடி யிரண்டினேப் பேரெண் எனவும், ஒரடி அதனிற் குறைதலின் சிற்றெண் எனவும் இவற்றிற்கும் பின்வரும் சின்னத் திற்கும் இடையே நிற்றலின் இருசிரை இடையெண் எனவும் பெயர் கூறினும் அமையும்’ என்பர் நச்சினர்க்கினியர். 3. சின்னம் என்பதனைத் தனிச் சொல்" எனக் கொண்டார் இளம்பூரணர்; சிற்றெண்’ எனக் கொண்டனர் பேராசிரியரும் நச்சிஞர்க்கினியரும். "எண்ணுெழிதல் என்னது எண் இடை யொழிதல்’ என்ற தல்ை, தலையெண்ணும் இடையெண்ணும் அல்லன எட்டு நான் காகியும், பதினறு எட்டாகியும் குறைந்து வருமென்பதும் கொள்க. மூவகையெண்ணும் சின்னமும்பெற்று வருதல் சிறப்புடைமை