பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£46 தொல்காப்பியம் நுதலியபொருள் ஒரு போகு என்பதன் இயல்பும் இரண்டு வகைப்படும்; கொச்சக வொருபோகு எனவும் அம்போதசங்க வொருபோகு எனவும் இருவகையாகப் பகுத்துணர்தல் வேண்டும்." தரவு முதலாயின வுறுப்புக்களுள் தரவின்றித் தாழிசை பெற்றும், தாழிசையின்றித் தரவு முதலியன வுடைத்தாகியும், எண்ணுகிய வுறுப்புக்களை இடையிட்டுச் சின்னம் என்றதோர் உறுப்புக் குறைந்தும், அடக்கியலாகிய சுரிதகமின்றித் தரவுதானே அடிநிமிர்ந்து சென்றும் இவ்வாறு ஒத்தாழிசைக்குரிய யாப்பினும் ‘ஏதமின்று என்ற தகுற் பெறுதும்’ எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் அறியத்தக்கதாகும். வண்ணக ஒத்தாழிசைக் கலிப் பாவில் எண் என்ற உறுப்பினேயடுத்துச் சின்னம் என்ப தோருறுப்பு இல்லா தொழியின் வண்ணக வொத்தாழிசையெனப் படாதென்பதும். "எண்ணிடையிட்டுச் சின்னம் குன்றியும்’ எனப் பின்னர்க்கூறுமாறு அஃது ஒருபோகு எனப் பெயர் பெறுமென் பதும் இதனுற் புலனுதல் காண்க. 1. மேல், ஒத்தாழிசைக் கலியிரண்டனுள் ஒன்ருய், “ஏனை யொன்று’ எனச்சொல்லப்பட்ட தேவபாணிச் செய்யுள், வண் ணகம் ஒருபோகு என இருவகையாகக் கூறப்பட்டது. அவற்றுள் ஒன்ருகிய ஒருபோகு’ என்பதும்; கொச்சக வொருபோகு, அம் போதரங்க வொருபோகு என இருவகைப்படும் என்பதாம். ஒருபோகு என்ற தொடர், ஒர் உறுப்புப் போகியது (இழந்தது) எனப் பொருள்படுவதாகும். ஒத்தாழிசைக் கலிக்கு ஒதிய உறுப்புக்களுள் ஒருறுப்பு இழந்தமையால் ஒருபோகு எனப் பெயராயிற்று 'ஒருறுப்பு இழத்தலின் ஒரு போகாதல் ஒக்கு மாயினும்’ எனப் பேராசிரியர் கூறுதலால் இப்பெயர்க் காரணம் ஒருவாறு புலனுதல் காணலாம் கொச்சகம் ஒருவழி வாராதது: கொச்சக வொருபோகு எனவும். வண்ணகப் பகுதிக்குரிய எண் ணுறுப்பு (அம்போதரங்கம்) ஒருவழி யில்லாதது அம்போதரங்க வொரு போகு எனவும் பெயர் எய்தின. 'கொச்சக வுடைபோலப் பெரும்பான்மையும் திரண்டு வருவது கொச்சக மெனவும், பலவுறுப்புக்களும் முறையே சுருங்கி யும் ஒரோவழிப் பெருகியும் கடைக்கண் விரிந்து நீர்த்தரங்கம் போறலின் அம்போதரங்க மெனவும் கூறினர்' என நச்சினர்க் கினியர் கூறுதலால் கொச்சகம், அம்போதரங்கம் என்பவற்றின் பெயர்க் காரணம் இனிது புல் தைல் காண்க.