பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/444

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 24? பொருளினும் வேறுபாடுடைத்தாகி வருவது கொச்சக வொரு போகாகும் என்பர் ஆசிரியர். இனி, கொச்சக வொரு போகாகிய இதன் விகற்பங்களைக் குறித்துப் பேராசிரியர் கருத்தை யொட்டி நச்சினர்க்கினியர் கூறிய விளக்கங்கள் இங்கு நோக்கத் தக்கனவாம். 1. தரவின்ருகித் தாழிசை பெற்றும் என்பது, தனக்கு இனமாகிய வண்ணகத்திற்கு ஒதிய தரவின்றித் தாழிசையே பெற்றும் (என்பதாம்). அவை பரணிப்பாட்டாகிய தேவபாணி" 1. எனவே, ஒத்தாழிசைக் கலிக்கு உறுப்பாகியவற்றுள் ஒன்றும் இரண்டும் குறைந்து வருவன கொச்சக வொரு போகெனப் பெயர் பெறுமென்று கொள்க’ என்பர் இளம்பூரணர். இனி, ஒருபோகு" என்றது குறித்து யாப்பருங்கல விருத்தி யாசிரியர் பின்வருமாறு கூறுவர்: "இனி ஒரு சார் கொச்சகங்களே ஒருபோகு என்று வழங்கு வாரு முளர். மயேச்சுவரராற் சொல்லப்பட்ட அம்போதரங்கமும் வண்ணகமும் என்றிரண்டு தேவபாணியுந் திரிந்து, தரவொழித்து அல்லாவுறுப்புப் பெறினும், தாழிசை யொழித்து அல்லாவுறுப்புப் பெறினும், அம்போதரங்கத்துள் ஒதப்பட்டமூவகை யெண்ணும் நீங்கினும், வண்ணகத்துக்கு ஒதப்பட்ட இருவகை யெண்ணும் நீங்கினும், நீங்கிய வுறுப்பொழியத் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று வருவன ஒருபோகு எனப்படும். அவை, அம்போதரங்க வறுப்புத் தழி இயின அம்போதாங்க வொருபோகு எனவும், வண்ணக வுறுப்புத் தழி இயின வண்ணக வொரு போகு எனவும் படும். என்னே? ' கூறிய வுறுப்பிற் குறைபாடின்றித் தேறிய விரண்டு தேவ பாணியும் தரவே குறையினும் தாழிசை யொழியினும் இருவகை முத்திறத் தெண்ணே நீங்கினும் ஒருபோ கென்ய வுணர்ந்திசி னுேரே” என்ருர் ம. பேச்சுவரர்.” 2. 'பரணியாவது, காடுகெழு செல்விக்கு (காளிக்கு)ப் பரணி நாட் கூழுந் துணங்கையும் கொடுத்து வழிபடுவதோர் வழக்குப் பற்றியது; அது பாட்டுடைத் தலைவனப் பெய்து கூறலிற் புறத் திணை பலவும் விராஅயிற்றேனும் தேவபாணியேயாம்' என்பது பேராசிரியர் நச்சிஞர்க்கினியர் முதலிய பண்டை யுரையாசிரியர் களது துணியாகும்.