பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 25% பொருள் மேல் மூன்றடுக்கி வருவனவும். அளவியலின் வேறுபடுவனவும் இனி ஐந்து அடியான் வருவனவற்றுள் ஈற்றடி குறைந்து வருவனவும் ஐந்தடியிற்ற பின் ஒரடியும் ஈரடியும் மிக்கு வருவனவும். முச்சீரான் இற்றுச்சீர் சிலமிக்கு வருவனவும், இனி ஆறுமுதலிய அடிகளான் வருவனவும் இவ்விலக் கன மெல்லாம் பெற்று வருதலும். கடவுட்டொடர் நிலைகள் பலதரவும் தாழிசையுமாகி இடைமிடையச் செய்வனவும் அடக்கிய லின்றி அடி நிமிர்ந்து அடக்கியல் பெற்று வருதலும் இன்னே ரன்ன பல பகுதிகளும் கொள்ளப்படும். இனி, பொருள் வேறு படுதலாவன தேவரைப் படர்க்கையாக்கிக் கூறலும், சுட்டி யொருவர் பெயர் கொளப்படுதலும், புறப் பொருளொடு தொடர்தலும், முற்கூறிய பொருள்கள் பிறவாறு வருதலுமாம்” இங்ங்ணம் யாப்பினும் பொருளினும் வேறுபட வந்த கொச்சக வகைகளைச் செய்யுளியல் i49-ஆம் சூத்திரவுரையில் நச்சிஞர்க்கினியர் மேற்கோள்களாக எடுத்துக்காட்டி விளக்கி யிருத்தல் உணர்ந்து மகிழத்தக்கதாகும். இனி, இவ்வாறு வந்த கொச்சகங்களை யெல்லாம் ஒருவரை யறைப் படுத்துத் தாழிசை, துறை, விருத்தம் என மூவகை இனமாக்கி, ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைச் செய்யுளோடும் உறழ்ந்து காட்டுவர் பின்வந்த யாப்பிலக்கண நூலாசிரியர்கள். ஆசிரியர் தொல்காப்பியனுள் வகுத்துரைத்த செய்யுளிலக்கணத்தினையும் அதன் வழியமைந்த பழந் தமிழ்ச் செய்யுட்களாகிய இலக்கியங்களையும் ஒப்பு நோக்கி புணர்ந்த பேராசிரியர் நச்சிஞர்க்கினியர் முதலிய பழைய உரை 1 . பத்தடுக்கி ஒரு பொருள் மேற் பதிகப் பாட்டாய் வரும் தேவாரம் திவ்வியப் பிரபந்தம் ஆகிய அருள் நூல்களில் அமைந்த திருப்பாடல்கள் இவ்வகையில் அடங்குவனவாம். 2. திருவெம்பாவைப் பாடல்கள் னட்டடியான் வந்து இவ்வாறு @p许-西剑@T·