பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தொல்காப்பியம் அவர்தம் பெற்றேர்கள், அப்பெயருடையார் பிறரினின்றும் வேறு பாடறிதல் கருதி, அப்பெயருடன் தொல் என்னும் அடைமொழி யினை யிணைத்துத் தொல்காப்பியன் எனத் தம் பிள்ளைக்குப் பெய ரிட்டார்கள் என்றே கருதவேண்டியுளது. ஆசிரியர்க்கு அவர் காலத்தில் வழங்கிய இயற்பெயர் தொல்காப்பியன் என்பதாதலின் அவரால் இயற்றப்பெற்ற நூலும் பாண்டியன் அவையத்தில் அரங் கேறும் நாளிலேயே தொல்காப்பியம் என வழங்கப்பெறுவ தாயிற்று. தொல்காப்பியன், பல்காப்பியன் என்னும் பெயர்களின் முன்னுள்ள அடைமொழிகள் அவர்கள் காலத்திலேயே அப்பெய ருடையார் பிறரினின்று பிரித்துச் சுட்டுதற்கு இயைத்துரைக்கப் பட்டன என்று கொள்ளுதலே பொருந்துவதாகும். எனவே தொல்காப்பியன் என்னும் இப்பெயர் ஒரு சொற்றன்மையில் வழங்கிய இயற்பெயரென்றே கொள்ளப்படும். நல்லந்துவர்ை, நல்விளக்களுர், நல்வேட்டனர் எனவரும் பெயர்களில் நல் என் னும் குணமடுத்து நிற்றல்போலவும், நக்கீரனுர், நச்செள்ளையார், நப்பாலத்தனர் எனவரும் பெயர்களில் 'ந' என்னும் சிறப்பு அடுத்து நிற்றல் போலவும் தொல்காப்பியனுர் என்னும் இப்பெய ரிலும் தொல் என்னும் அடைமொழி சேர்க்கப்பெற்று அவர் காலத்திலேயே வழங்கியதென்பது துணியப்படும். தொல்கபிலர் என்பதும் இவ்வாறே வழங்கியிருத்தல் கூடும். பல்லாயிர ஆண்டுகளுக்கு முன் வழங்கிய காப்பியன், ஆதன், பூதன் என்ப வற்றின் பெயர்க் காரணம் இவையெனத் துணிதற்குரிய சான்று கள் கிடைக்கவில்லை. தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் ஆசிரியர் தொல்காப்பியரைது வரலாற்றை விளக்குதற்குரிய பழையநூற் சான்ருகக் கிடைத்திருப்பது, தொல்காப்பியனருடன் ஒருசாலை மாணவராகிய பனம்பாரனர் பாடிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரமேயாகும். தொல்காப்பியனர் வரலாற்றை யுள்ள