பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 255 ஒரு பொருளைக் குறித்துத் தொடுக்கப்பட்ட் வெள்ளடியிய லால் திரிவின்றி முடிவது கலிவெண் பாட்டாகும்’ என்பர் தொல்காப்பியர்: வெள்ளடியால் என்னுது வெள்ளடியியலான் என்றமை யால், வெண்டளையால் வந்து ஈற்றடிமுச்சீராய் வருவனவும், பிற தளையால் வந்து ஈற்றடி முச்சீராய் வருவனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர்:” முறை பிறழ்ந்து வருவனவும், ஒத்து அறபதடியின் மிக்கு வருவன வும் பரிபாடல் என க் கொள்ளத் தக்கனவாம் எனவும் இவற் றிடையேயமைந்த வேறுபாட்டினே உரையாசிரியர் நன்கு விளக்கியுள்ளார், o 1. செப்பலோசையிற் சிதையாது ஒரு பொருள் மேல் வெள்ளடி யால் வெண்பா முடியுமாறு முடிவன கலிவெண்பா என்னும் சிறப் புடையன என்பது ஆசிரியர் தொல்காப்பியனர் கருத்தாகும், (யா. வி. பக். 310) இனி, கலித்தளே தட்டுக் கலியோசை தழுவிக் கடையடி வெண்பா முடியுமாறு போல முச்சீரடியால் முடிவது கலிவெண்பா என்ப்ர் யாப்பருங்கல ஆசிரியர். 'தன்றளே யோசை தழுவிநின் ஹீற்றடி வெண்பா வியலது கலிவெண் பாவே' என்பது யாப்பருங்கலம் (செய்யுளியல் 85-ம் சூத்திரம்). 3. 2. இவற்றுள் வெண்டளேயால் வந்த செய்யுள் 'வெண் கலிப்பா எனவும், அயற்றளேயால் வந்த செய்யுள் கலிவெண்பா எனவும் இளம்பூரணர் உரையிற் குறிப்பிடப் பெற்றுள்ளன. கலித்தளே தட்டுக் கலியோசை தழுவி ஈற்றடி முச்சிரான் முடிவதனை “வெண் கலிப்பா எனவும், வெண்டளே தட்டு வெள் ளோசை தழுவி ஒரு பொருள்மேல் வருவதனைக் கலிவெண்பா எனவும் பெயரிட்டு வழங்குவர் குணசாகரர். (யா.காரிகை, 32ம் செய்யுளுரை). வெள்ளோசையில்ை வருவதனேக் கலிவெண்பா வென்றும் பிற வாற்ருல் வருவனவற்றை வெண்கலிப்பா என்றும் வேறுபடுத்துச் சொல்வாரும் உளர்’ என்பர் யாப்பருங்கல விருத்தி யாசிரியர்" (பக்கம் 311) இவ்வுரைப் பகுதிகளைக் கூர்ந்து நோக்குங்கால் வெண்டளே யால் வந்ததனக் கலிவெண்பா எனவும் பிற தளேயால் வந்ததனே "வெண் கலிப்பா" எனவும் வழங்கும் பெயர் வழக்கே பொருத்த முடைய தெனத் தெரிகிறது.