பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 登59 வேருகலிற் கொச்சக மென்ருர் எனவும். இனி பலவடுக்கிப் பொருட்டொடராய் அறம், பொருள், இன்பம், வீடு என்பன விராய்ப் பொருள்வேறுபட வரும் தரவுகொச்சகம் பின்னுள் ளோர் செய்த சிந்தாமணி முதலியனவாம்' எனவும், திருச் சிற்றம்பலக் கோவையுள் திருவளர் தாமரை, போதோ விசும்போ' என்பன பதினேழெழுத்தும் பதிெைறழுத்துமாய் வந்த தரவு கொச்சகம் எனவும், குயிலச் சிலம்படி காரணி கற்பகம் என வரும் இவை ஒரோவெழுத்து மிக்க தரவுகொச்சகம் எனவும் நச்சினர்க்கினியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும். கூற்றும் மாற்றமும் விரவிவந்து சுரிதகமின்றி முடிவது உறழ்கலிப்பா என்பர் தொல்காப்பியர். எனவே ஒருவர் ஒன்று கூறுதற்கு மறுமாற்றம் மற்ருெருவர் கூறிச்சென்று பின்னர் அவற்றைத் தொகுத்து முடிப்பதோர் சுரிதகமின்றி முடிதல் உறழ் கலியின் இலக்கணம் என்பது இனிது புலம்ை. இதனைக் கொச்சகக் கலியின் பின் வைத்தமையான் அக்கொச்சக வுறுப்பின் ஒப்பன இதற்கு உறுப்பாகக் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். உறழ்கலியாகிய இது, நாடகச் செய்யுட் போல வேறுவேறு துணிபொருளவாகிப் பல தொடர்ந்தமையிற் பெரிதும் வேறு பாடுடைமை நோக்கியும், இது பொருளதிகார மாதலாற் பொருள் வேறுபாடு பற்றியும் வரலாற்று முறைமை பற்றியும் இதனைக் கொச்சகக் கலியுள் அடக்காது வேறு செய்யுளாகப் பிரித்து இலக்கணங் கூறிஞர் ஆசிரியர். ஆசிரியப்பாவின் பெருக்கத்திற்கு எல்லே ஆயிரம் அடியாகும்; சுருக்கத்திற்கு எல்லே மூன்றடியாம் என்பர் ஆசிரியர். ஆசிரிய நடைத்தே வஞ்சி' என்பதனுல் வஞ்சிப்யாவிற்கும் ஆயிரம் அடி பேரெல்லையாகக் கொள்ளப்படும்.