பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/458

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 36; புறநிலை வாழ்த்தும் வாயுறை வாழ்த்தும் செவியறிவுறுஉவும் வெண்பா முன்னும் ஆசிரியம் பின்னுமாய் வந்து முடியும் பாவின் கண் வருதற்குரியன" என்பர் ஆசிரியர். பரிபாடல் என்னுஞ் செய்யுள், நானூறடி உயர்ந்த எல்லே யாகவும் இருபத்தைந்தடி குறைந்த எல்லையாகவும் வரும். செய்யுட்களின் அளவியல் வகை மேற்கூறிய கூறுபாட்டினதாகும். எழுவகை நிலத்தும் தோன்றிய செய்யுளை ஆராயின், அடி வரையறை யில்லாதன ஆருகும். அவையாவன நூல், உரை, நொடியொடு புணர்ந்த பிசி, ஏது நுதலிய முதுமொழி, மறை மொழி கிளந்த மந்திரம், கூற்றிடை வைத்த குறிப்பு என்பன வாம்.சி அவற்றுள், நூல் என்பது, சொல்ல எடுத்துக்கொண்ட பொருள் தொடக்கம் முதல் முடிவுவரை மாறுபடின்றியமையத் தொகுத்தும் வகுத்தும் காட்டித் தன்கண் அடங்கிய பொருளே விரித்துரைத்தற்கேற்ற சொல்லமைப்பொடு பொருந்தி, நுண் பொருள்களை விளக்கும் பண்பினதாகும். அந்நூல்தான் நால் வகைப்படும்; ஒரு பொருளையே நுதலிவரும் சூத்திரமும், ஓரினப் பொருள்களையே தொகுத்துரைப்பதாகிய ஒத்தும், பல பொருட் 1. எனவே மருட்பா மேற்குறித்த நான்கு பொருளினல்லது வரப்பெருதாயிற்று. 2. எழுநிலமாவன: பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பன என்பர் இளம்பூரணர்; அகமும் புறமுமாகிய எழுவகைத் தினேகள் என்பர் பேராசிரியர். 3. இத்தொடர்க்கு நொடிதல் மாத்திரையாகிய பிசி தானப் பொருள் கொள்வர் பேராசிரியர், நொடியாவது, புனைந்துரை வகை யாற் படைத்துக் கூறப்படுவதாகும். நொடியொடு புணர்ந்த பிசி யெனவே பிசிக்கு நிலேக்களம் நொடியென்பது பெறப்படும். 4. பிசியும், முதுமொழியும், மந்திரமும், குறிப்பும் என நான் கும் வழக்குமொழியாகியுஞ் செய்யுளாகியும் வருதலின் ஈண்டு அவற்றுட் செய்யுளேயே கோடற்கு அவற்றுக்கு அளவில் என்றர்.