பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2é? தொல்காப்பியம் நுதலியபொருள் கும் பொதுவாகிய இலக்கணங் கூறும் பட்லமும், இம்மூன்று உறுப்பினையும் ஒருசேரத் தன்னகத்தே கொண்ட பிண்டமும் என இந் நால்வகையால் நடக்கும் என்பர் ஆசிரியர். பாட்டின் இடையே வைக்கப்பட்ட பொருட் குறிப்பினல் வருவனவும், பாட்டின்றி வழக்கின்கண் உரையளவாய் வரு வனவும், பொருள்மரபாகிய உண்மை நிகழ்ச்சியின்றிப் பொய்யே புனைந்துரைக்குமளவில் வருவனவும், பொய்யெனப் படாது மெய்யெனப்பட்டும் நகைப்பொருள் அளவாய் வருவன வும் என உரைவகை நடை நான்காகும். அவ்வுரை தானும் மற்ருெரு திறத்தால் இரண்டாகப் பகுத்துரைக்கப்படும்." 1. "'சூத்திரம் என்னும் ஒருறுப்படக்கிய பிண்டம் இறை யனர் களவியல்; சூத்திரமும் ஒத்தும் என்னும் இரண்டு உறுப் படக்கிய பிண்டம் பன்னிருபடலம்; சூத்திரம், ஒத்து, படலம் என்னும் மூன்று உறுப்படக்கிய பிண்டம் தொல்காப்பியம். இவை முறையே சிறு நூல், இடை நூல், பெருநூல் எனப்படும், இனி, அகத்தியம் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று உறுப்பினேயும் அடக்கி நிற்றலின் அது பிண்டத்தினே யடக்கிய வேருேச் பிண்டம்” என்பர் நச்சினர்க்கினியர். 2. உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய சிலப்பதி காரத்தில் இடையிடையே வரும் உரைநடை இவ்வகையைச் சார்ந்தாகும். 3. உலக வழக்கில் பாட்டின்றித் தனியே வழங்கும் வசன ைைட பாவின் றெழுந்த கிளவி எனப்படும். 4. யானையும் குருவியும் தம்முள் நண்புகொண்டு இன்னவிடத் தில் இன்னவாறு செய்தன என்ருங்கு அவற்றின் இயல்புக்கு ஒவ்வாத வகையில் இயைத்துரைக்கப்பட்டுக் கதையளவாய் வழங்கும் உரைநடை பொருள்மர பில்லாப் பொய்ம்மொழி’ யெனப்படும். 5. முழுவதும் பொய்யென்று தள்ளப்படும் நிலேயிலமையாது உலகியல்ாகிய உண்மை நிலையை ஒருவாற்ருன் அறிவுறுத்துவன வாய்க் கேட்போர்க்கு நகைச்சுவையை விளேக்கும் பஞ்ச தந்திரக் கதை போலும் உரைநடை பொருளோடு புணர்ந்த நகைமொழி' எனப்படும். 6. அவையாவன : மைந்தர்க்கு உரைப்பன. மகளிர்க்கு உரைப்பன என்னும் இருவகையாம் என்பர் இளம்பூரணர். இனி