பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/464

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 靈é宵 எனவரும் இதனுள் குட்மே தலையாகப் பிறந்தார் எனவும், கொம் பெழுந்த வாயினர் எனவும், கையுட் கொண்ட் முக்கினர் எனவும் கூறியக்கால், எழுத்துஞ் சொல்லும் பொருளும் இயல்பில வாதலும் குறிப்பினுன் அதனைக் குஞ்சரம் எனக் கொண்டவாறும் கண்டுகொள்க’ எனப் பேராசிரியர் காட்டிய உதாரணமும் விளக்கமும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கனவாகும். 'இது பாட்டு வடிவிற்ருய் வருதலிற் பிசியெனலும் ஆகாது; குறித்த பொருளை நாட்டி நாற்சொல் லியலான் யாப்புவழிப் படாமையின் மரபழிந்து பிறவும் குறைதலிற் பாட்டெனவும் படா தாயிற்று. அதனுல் இது அடி வரையறை யின்ருயிற்று" என்பர் நச்சினர்க்கினியர். அடிவரையறை யில்லாதனவாகிய அறுவகைச் செய்யுட் களின் இயல்பினை விரித்துரைத்த தொல்காப்பியனுர், இவ்வியல் 173 முதல் 175 முடியவுள்ள சூத்திரங்களால் இசைநூலின் பாவினமாகிய பண்ணத்தி யென்பதன் இயல்பு கூறி, 176-ஆம் சூத்திரத்தால் அளவியல் பற்றி முற்கூறிய இலக்கணங்களைத் தொகுத்து முடிக்கின்ருள்." பாட்டின்கண் கலந்த பொருளை யுடையனவாகிப் பாட்டுக் களின் இயல்பை யுடையன பண்ணத்தி யெனப்படும் என்பது, " பாட்டிடைக் கலந்த பொருள வாகிப் பாட்டினியல பண்ணத் திய்யே" (செய்-173) எனவரும் நூற்பாவால் இனிது விளங்கும். 'பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தி யென்ருர்: அவையாவன சிற்றிசையும் பேரிசையு முதலாக இசைத் தமிழில் 1. அளவியல் வகையே யனவகை படுமே (செய்யு.156) என்னும் சூத்திரம், பாவிற்கு அடி வரையறுத்துக் கூறப்பட்டது. இது (செய்யுள்-176-ம் சூத்திரம் செய்யுள் இனத்தென வரையறுத் துணர்த்திற்று” என்பர் இளம்பூரணர்.