பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 தொல்காப்பியம் துதலியபொருள் "கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என்னும் ஏழு திணைகளும் முறையே மேற்சொல்லப் பட்டன” என்பர் ஆசிரியர். 'முறைமையினுற் சொல்லுதலாவது, பாடாண் பாட்டினைக் கைக்கிளைப் புறமெனவும், வஞ்சியை முலைப்புற மெனவும், வெட்சி யைக் குறிஞ்சிப்புறமெனவும், வாகையைப் பாலைப்புறமெனவும், உழிஞையை மருதப்புறமெனவும், தும்பையை நெய்தற்புற மெனவும், காஞ்சியைப் பெருந்திணைப் புறமெனவும் ஒதியநெறி கொள்ளப்படும். இவ்வாறு கொள்ளவே பதின்ைகு திணையும் ஏழாகியடங்குமாயின என்பர் இளம்பூரணர். 14. கைகோள். அவ்வத் திணயொழுக்க விகற்பமாகிய களவும் கற்பும் என்னும் இப்பாகுபாடுகளை அறியச் செய்தல் கைகோள் எனப்படும். காமப்புணர்ச்சி (இயற்கைப் புணர்ச்சி), இடந்தலைப்பாடு பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம் எனச் சொல்லப்பட்ட அந் நான்கு வகையாலும் அவற்றைச் சார்ந்து வருகிற கிளவி யாலும் வருவன களவென்னும் கைகோளாகும். ‘காமப் புணர்ச்சி நிகழ்ந்தன்றி இடந் தலைப்பாடு நிகழா தெனவும், அவ் இடந்தலைப்பாடு பிற்பயத்தலரிதென்பது அவள் ஆயத்தொடுங் கூடிய கூட்டத்தான் அறிந்த தலைமகன், பாங் கனை உணர்த்தி அவனுற் குறை முடித்துக் கோடலும், தன்வயிற் பாங்கன் அவள்வயிற் பாங்கு செய்யானகலின் அதன் பின்னர்த் தோழியாற் குறை முடித்துக் கோடலும் என இந் நான்கும் முறை யான் நிகழுங் களவொழுக்கம்' என்பர் பேராசிரியர், மறைந்தொழுகும் ஒழுகலாருகிய களவு வெளிப்படுதலும், தலைவியின் சுற்றத்தார் கொடுப்பக் கரணவகையாற் பெறுதலும்