பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 275 முன்னர்த் திணையென அடக்கப்பட்டனவாதலால், ஈண்டு இட மென்றது வினை செய்யிடத்தையேயென்பது நன்குபுலனும். கரும நிகழ்ச்சியென்றதனுல் அந் நிகழ்ச்சிக்கு நிலைக்களமாகிய தன்மை, முன்னிலை, படர்க்கை யென்பனவும் இடமெனக் கொள்ளப்படும். 18. காலம்:- இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலத்தினும் நிகழ்கின்ற நிகழ்ச்சி ஆராய்ந்துணரு மாறு செய்யுளுள் தோன்றச் செய்யின் அதுகாலம் என்னும் உறுப்பாகும். பெரும் பொழுதும் சிறு பொழுதும் முதல், கரு, உரிப் பொருள் என்பவற்றேடு கூடித் திணையென அடங்குமாதலின் அவற்றின் வேருகிய பொருள் நிகழ்ச்சியை ஈண்டுக் காலம் என்ருள். 19. பயன்.- சொல்லிய சொல்லாற் பிறிதொன்று பயப்பச் செய்தல் பயன் என்னும் உறுப்பாகும். 'யாதானும் ஒரு பொருளைக் கூறியவழி இதற்ைபோந்த பயன் இதுவென விரித்துக் கூருது முற்கூறிய சொல்லினலே தொகுத்துணரவைத்தல் பயன் எனப்படும் என்பர் ஆசிரியர். 'இவ்வகையில்ை யாதானுமொரு செய்யுளாயினும் பயன் படக் கூறல் வேண்டும் என்பது கருதிப் பயன் என ஒரு பொருள் கூறினர்” என்பர் இளம்பூரணர். 20. மெய்ப்பாடு:- யாதானும் ஒன்றைக் கூறியவழி அதனை ஆராய்ந்துணர்தலின்றிச் செய்யுளிடத்து வந்த அப் பொருள் தானே வெளிப்பட்டுத் தோன்றிற்ை போன்று கண்ணி ரரும்பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலிய மெய்ப்பாடு தோன்று மாற்ருல் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடென்னும் உறுப்பாகும்