பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/473

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 தொல்காப்பியம் நுதலியபொருள் அது, நகை முதலிய எண்வகை மெய்ப்பாட்டு நெறியினையும் பிழையாதாகி, மேல் மெய்ப்பாட்டியலிற் சொல்லப்பட்ட இலக் கணத்தை யுடையதாம் என்பர் ஆசிரியர். 'கவிப்பொருள் உணர்ந்தால், அதனுனே சொல்லப்படும் பொருள் உய்த்து வேறு கண்டாங்கு அறிதலே மெய்ப்பாடு' என்ருன். அது, தேவருலகம் கூறினும் அதனைக் கண்டாங்கு அறியச் செய்தல் செய்யுளுறுப்பாம்....நோக்குறுப்பால் உணர்ந்த பொருட் பிழம்பினைக் காட்டுவது மெய்ப்பாடென்பது இதன் கருத்து. இக்கருத்திற் 'கவி கண்காட்டும் எனவுஞ் சொல்லுப' எனப் பேராசிரியர் கூறிய விளக்கம் அறிந்து மகிழத் தக்கதாகும். 21. எச்சம்:- கூற்றினுலும் குறிப்பிலுைம் எஞ்சிநின்று பின் கொணர்ந்து முடிக்கப்படும் இலக்கணத்தொடு பொருந் தியது எச்சமென்னும் உறுப்பாகும். எனவே கூற்றெச்சம், குறிப்பெச்சம் என எச்சம் இரு வகைப்படும் என்பதாயிற்று. ' செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோ லம்பின் செங்கோட் டியானே கழருெடிச் சேஎய் குன்றம் கருதிப் பூவின் குலைக்கா ந் தட்டே' (குறுந்-1) எனச் செய்யுள் முடிந்தவழியும், இவற்ருன் யாம் குறையுடையே மல்லேம்' என்று தலைவற்குச் சொன்னுளேல் அது கூற்றெச்ச மாம்; என்ன? அவ்வாறு கூறவும் சிதைந்ததின்மையின் தலை மகட்குச் சொன்னுளேல் அது குறிப்பெச்சம்; என்ன? அது காண்பாயாகிற் காண்’ எனத் தலைமகளை இடத்துய்த்து நீங்கிய குறிப்பினளாகி அதுதான் கூருளாகலின்.” எனப் பேராசிரியர் காட்டிய உதாரணமும் விளக்கமும் இவண் நோக்கத்தக்கன வாகும்.