பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 277 22. முன்னம்:- செய்யுளைக் கேட்போன், இவ்விடத்துத் தோன்றிய இம்மொழியைச் சொல்லுதற்குரியாரும் கேட்டற் குரியாரும் இன்னுர்’ என்று அறியுமாற்ருல் அங்ங்ணம் அறிதற்கு ஒர் இடம் நாட்டி அவ்விடத்துக் கூறுவார்க்கும் கேட்பார்க்கும் ஏற்ற உரை செய்யுட்கு ஈடாகச் சொல்லுவது முன்னம் என்ற உறுப்பாம் என்பர் ஆசிரியர்.

  • யாரிவன் எங்கூந்தல் கொள்வான் இதுவுமோர்

ஊராண்மைக் கொத்த படிறுடைத்து” (கலித்-89) என்றக்கால், இது கூறுகின்ருள் தலைவியென்பதும் இங்ங்ணம் கூறப்பட்டான் தலைவன் என்பதும் குறிப்பினுல் அறியவைத்தலின் இது முன்னம் என்ற உறுப்பாயிற்று. 23. பொருள்வகை:- பொருள் என்றது, புலவன் தான் தோற்றிக்கொண்டு செய்யப்படுவதோர் பொருண்மையை. இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமும் எனப்பட்ட இவை வழுவாத நெறியால் இத்திணைக்கு இது பொருள் என ஒதிய உரிப்பொருளன்றி எல்லா உரிப்பொருட்கும் ஏற்பப் (புலவல்ை புதுவதாகத் தோற்றிக் கொள்ளப்பட்டுப்) பொதுவாகி நிற்கும் பொருளே பொருள்வகை யென்பர் ஆசிரியர். " கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாளுெடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்ருேள் பெறல்நசைஇச் சென்றவென் னெஞ்சே ” (அகம்-9)