பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 25 என இவ்விரண்டெல்லைகளுங் குறிக்கப்பட்டன என்பது இவண் கருதற்குரியதாகும். ஒரு நாட்டிற்குக் கூறப்படும் எல்லே அகப்பாட்டெல்லை, புறப்பாட்டெல்லை என இருதிறப்படும். அவற்று அகப்பாட் டெல்லையாவது அந்நாட்டின் வரம்புக்கு உள்ளடங்கிய பகுதி யாகும். புறப்பாட்டெல்லையாவது அந்நாட்டிற்கு வெளியே யமைந்த நிலப்பகுதியாம். இச்சிறப்புப் பாயிரத்திற் குறிக்கப்பட்ட வேங்கடமலையுங் குமரியாறும் தமிழ்நாட்டின் உட்பகுதியில் அமைந்திருந்தன ஆதலால் இவையிரண்டும் அகப்பாட்டெல்லே யென்பர் இளம்பூரணர். எனவே குமரியாற்றின் தெற்கிலும் வேங்கட மலையின் வடக்கிலும் தமிழகத்தைச் சேர்ந்த நிலப் பகுதிகள் அமைந்திருந்தன என்பது புலனும். குமரியாற்றின் தென்பாலமைந்த தமிழ் நிலத்தைச் சார்ந்து தமிழ்திரி நில மாகிய குறும்பனநாடு இருந்த தென்றும் அக்குறும்பன நாட்டினத் தமிழ் கூறும் நல்லுலகம் அன்றென்று விலக்குதற் பொருட்டே பனம்பாரளுர் தென் குமரி யெனக் குமரியாற்றைத் தென்றிசை யெல்லையாகக் குறித்தாரென்றும், தெற்கிலுள்ள குறும்பனை நாடும் குமரியாறும் கடல்கோளால் அழிவதற்கு முன்னமே இத்தொல்காப்பியம் இயற்றப்பெற்றதென்றும் அறிஞர் கூறுவர். "அது தானும் (அத்தொல்காப்பியமும்) பனம்பாரளுர் வட வேங்கடந் தென்குமரி எனக் குமரியாற்றினை யெல்லையாகக் கூறிப் பாயிரஞ் செய்தமையிற் சகரர் வேள்விக் குதிரை நாடித் தொட்ட கடலகத்துட்பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடு வதற்கு முன்னேயதென்பது உம்' (தொல்-மரபு. 94-ஆம் சூத்திரம் உரை) என்பர் பேராசிரியர். 'வடக்குந் தெற்குங் குணக்குங் குடக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பெளவமென்