பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2器鸣 தொல்காப்பியம் நுதலியபொருள் 29. தொன்மை:- உரையொடு புணர்ந்த பழமை பொரு ளாக வருவது தொன்மை யென்னும் வனப்பாகும். உரையொடு புணர்தல் நெடுங்காலமாகப் பலராலும் சொல் லப்பட்டு வழங்கி வருதல். பழமை-பழங்கதை. பழமைத்தாகிய பொருள்மேல் வருவன, இராம சரிதை பாண்டவ சரிதை முதலா யினவற்றின்மேல் வருஞ் செய்யுள் என்பர் இளம்பூரணர். இனி, பேராசிரியரும் நச்சிஞர்க்கினியரும் உரையொடு புணர்ந்த' என்ற தொடர்க்கு உரை நடையுடன் விரவிய' எனப் பொருள்கொண்டு, பெருந்தேவரைாற் பாடப்பட்ட பாரதமும் தகடுர் யாத்திரையும் போல அமைந்த உரையிடையிட்ட செய்யுட் களத் தொன்மை என்னும் வனப்புக்கு உதாரணமாகக் குறித் துள்ளார்கள். 30. தோல்:- இழுமென்னும் ஓசையையுடைய மெல் லென்ற சொல்லால் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும், பரந்த மொழியால் அடி நிமிர்ந்துவரத் தொடுப்பினும் தோல் என்னுஞ் செய்யுளாம். எனவே, தோல் என்னும் வனப்பு இருவகைப்படும் என்ப தாயிற்று. 'பாயிரும் பரப்பகம்’ என்ற முதற் குறிப்புடைய செய்யுள் இழுமென்மொழியால் விழுமியது நுவன்றது எனவும், "திருமழைதலைஇய விருணிறவிசும்பின்” என்னும் கூத்தராற்றுப் 1. தொன்றுபட வரூஉந் தொன்மைத்தாதலின் (சிலப்.ஊர் காண்.45) எனவும், 'நீ யறிந்திலேயோ நெடுமொழியன்ருே (சிலப். ஊர்காண்.49) எனவும் வரும் சிலப்பதிகாரத் தொடர்களும் "தொன்றுபட வரூஉத் தொன்மைத்து-அடிப்பற்றி வருகின்ற பழமைத்து எனவும், நெடுமொழி.பெருவார்த்தை. பழைதாகப் போதுகின்ற வார்த்தை என்றுமாம் எனவரும் அரும் பதவுரையும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. 2. மார்க்கண்டேயனுர் காஞ்சி.