பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/482

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 285 படை பரந்த மொழியால் அடி நிமிர்ந்து வந்தது எனவும் உதாரணங் காட்டுவர் இளம்பூரணர். 'யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது' எனப்பட்ட கொச்சகத்தால் இயன்ற சீவக சிந்தாமணி போன்ற தொடர் நிலைச் செய்யுட்கள் இழுமென்மொழியால் விழுமியது நுவன்ற தோல் என்னும் வகையைச் சார்ந்தன எனவும், ஆசிரியப்பாட்டால் ஒருகதைமேல் தொடுக்கப்பட்ட தொடர்நிலைச் செய்யுட்கள் பரந்த மொழியால் அடி நிமிர்ந்தொழுகிய தோல் என்னும் வகையின் பாற் படுவன எனவும் நச்சினர்க்கினியரும் பேராசிரிய ரும் கூறிய விளக்கம் இங்கு நோக்கற்பாலனவாம். செய்யுளியலின்கண்ணே ஆசிரியர் பாவும் இனமும் என நான்கினீக்கிய பாவினைத் தொகை வரையறையான் இரண்டென அடக்கியும், விரிவரையறையான் ஆறென விரித்தும், அவற்றை அறம் பொருளின்பத்தாற் கூறுக என்றும் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டு வனப்பும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கண மென்று கூறியவர், இழுமென்மொழியான் விழுமியது நுவலினும், பரந்த மொழியான் அடி நிமிர்ந்தொழுகினும் (செய்-230) என்பதனல், குவிந்து மெல்லென்ற சொல்லானும் பரந்து வல் லென்ற சொல்லானும் அறம் பொருளின்பம் பயப்ப வீடென்னும் விழுமியபொருள் பயப்ப ஒரு க ைத மே ற் கொச்சகத்தானும் ஆசிரியத்தானும் வெண்பா வெண் கலிப்பாவானும் மற்றும் இன் ளுேரன்ன செய்யுட்களானும் கூறுக என்றமையான், இத்தொடர் நிலைச் செய்யுள் அங்ங்ணங் கூறிய தொடர்நிலை” எனச் சிலப் பதிகார உரைப்பாயிரத்தே அடியார்க்கு நல்லார் கூறியவற்றைக் கூர்ந்து நோக்குங்கால், தொல்காப்பியனர் கூறிய தோல் என்னும் வனப்பினது இருவகையியல்பும் ஒருசேரப் பெற்றது சிலப்பதிகாரம் என்பது நன்கு புலனும். 1. மலேuடுகடாம்,