பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 287 33. புலன்:- பலருக்கும் தெரிந்த வழக்கச் சொல்லி ேைல செவ்விதாகத் தொடுக்கப்பட்டுக் குறித்த பொருள் இது வென ஆராய வேண்டாமல் தானே விளங்கத் தோன்றுவது புலனென்னுஞ் செய்யுளாம். 'அவை விளக்கத்தார் கூத்து முதலாகிய நாடகச் செய்யு ளாகிய வெண்டுறைச் செய்யுள் போல்வன” என்பர் பேராசிரியர். 34. இழைபு:- ஒற்றெடு புணர்ந்த வல்லெழுத்துப் பயிலாமல் குறளடி முதல் ஐந்தடியினையும் ஒப்பித்து ஓங்கிய மொழியால் பொருள் புலப்படச் செய்வது இழைபு என்னும் வனப்பாகும் என்பர் ஆசிரியர். நாலெழுத்து முதல் இருபதெழுத்தின் காறும் உயர்ந்த பதினேழ் நிலத்தின் ஐவகையடியும் முறையானே வரத் தொடுக்கப் பட்ட போந்து போந்து' என்ற முதற் குறிப்புடைய ஆசிரியப் பாவினை இழையென்னும் வனப்புக்கு இலக்கியமாகக் காட்டினர் இளம்பூரணர். இழைபாவன கலியும் பரிபாடலும் போலும் இசைப் பாட் டாகிய செந்துறை மார்க்கத்தன எனவும், இவை தேர்தல் வேண்டாது பொருள் இனிது விளங்கல் வேண்டும் என்றது, அவிநயத்திற்கு உரியவாதல் நோக்கி எனவும் பேராசிரியர் கூறிய விளக்கம் கூர்ந்து நோக்கத் தக்கதாகும். செய்யுளிடத்துப் பொருள் பெற ஆராய்ந்து நுண்ணிதின் வகுத்துரைக்கப்பட்ட இலக்கணத்தின் வழுவியன போன்று தோன்றுவன உள வா யி ன் அவற்றையும் முற்கூறப்பட்ட இலக்கணத்தோடு மாறுபடாமல் முடித்துக்கொள்ளுதல் தெளிந்த அறிஞர்களது கடனுகும் என ஆசிரியர் இவ்வியலுக்குப் புறனடை கூறி முடித்துள்ளார். இதனைக்கூர்ந்து நோக்குங்கால் இவ் வியலிற் கூறப்பட்டு உள்ள செய்யுளிலக்கண நுட்பங்கள் கால ந்