பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/487

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露鄧算 தொல்காப்பியம் துதலியபொருள் என்ற பெயர்களால் வழங்குதலும் பொருந்தும். மேற்கூறிய ஐந்' தனுள் நாயல்லாத என நான்கிற்கும் பிள்ளை' என்ற பெயரும் உரியதாகும். யாடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் எனச் சொல்லப் பட்ட ஐந்தும் மறி' என்னும் இளமைப் பெயர் பெறுவன. மரக்கிளையினையே வாழுமிடமாகக் கொண்ட குரங்கும்’ "குட்டி என்று கூறப்படும். மிகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு என்ற இந்நான்கு பெயர்களும் குட்டி என்பது போல அக் குரங்கின் பகுதிக்கு உரியவாகும். "கன்று என்னும் பெயர்க்குரியன: யானை, குதிரை, கழுதை, கடமை, மான், எருமை, மரை, கவரி, கராகம் ஒட்டகம் என்பனவாம். 'குழவி என்ற பெயர்க்குரியவை: யானை, ஆ, எருமை கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம் என்பனவாம்: 1, நவ்வி. புள்ளிமான் 'மடனுடையன. நவ்வி எனவும் இடை நிகரன உழை எனவும் கொள்க’ என்பர் பேராசிரியர். 2. முழை எனப் பாடங்கொண்டு, முழா எனப் பொருளுரைப் பர் இளம்பூரணர். அப்பெயருடைய உயிர்வகை இதுவென விளங்கவில்லை. 3. கோடு வாழ் குரங்கு’ எனவே அதன் இனமாகிய ஊக மும் முசுவும் குட்டி’ என்ற பெயர் பெறும் எனக் கொண்டார் இளம்பூரணர். 'குரங்கும் என்ற உம்மையை இறந்தது தழி இ யிற்ருகக் கொண்டு, முற்கூறிய யாடு, குதிரை; நவ்வி, உழை, புல்வாய் என்னும் ஐந்து சாதிக்குங் குட்டி யென்னும் பெயர் கூறப்படும் என்பர் பேராசிரியர். 4. ஆன்’ என்பது பேராசிரியர் கொண்ட பாடம். ஆன் கன்று என்பது உதாரணம். 5. கராகம்-கரடி, கராம் என்பது பேராசிரியர் கொண்ட பாடம்,