பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 293 அவ்வகையைச் சார்ந்தன பிறவும் உளவாம் என்பர் ஆசிரியர். உலகிலுள்ள உயிர்த்தொகுதிகளின் உடம்புகளையும் அவ் வுடம்புகளில் வைகிய உயிர்கள், மெய், வாய், முக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளும் மனமும் ஆகிய அறுவகை வாயில்களையும் படிப்படியாகப் பெற்று அறிவினுற் சிறந்து விளங்கும் இயல்பினையும் நன்கு கண்டு. அவற்றை ஒரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈருக அறுவகையாகப் பகுத்துரைக்கும் இம் முறை, தமக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே நுண்ணறிவுடைய புலவர்களால் ஆராய்ந்து வகுக்கப்பெற்று வழங்கிவரும் தொன்மை வாய்ந்ததென்பதனை நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே (தொல்-மரபு-27) என்ற தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனர் தெளிவாகக் குறித்துள்ளார். ஐம்பொறி யுணர்வுக்கும் அடிப்படையாய் விளங்குவது மன வுணர்வாயினும், மனமாகிய கருவியினை வாயிலாகக்கொண்டு நன்றுந்தீதும் பகுத்துணரும் ஆற்றல் மக்களாகிய ஒருசார் உயிர்த் தொகுதிக்கே வெளிப்படப் புலனுதலின் மக்கள் தாமே ஆறறி வுயிரே என்ருர் ஆசிரியர். ஒரு பொருளைக் குறித்து மனம் எண் ணிக் கொண்டிருக்கும் நிலையில் மற்ருெரு பொருள் கண்ணெதிர்ப் பட்டால் அதனைக் கண்ணென்னும் பொறியுணர்வு கொள்ள அவ்வுணர்வின் வழியே மனம் திரிந்து அக்காட்சியில் ஈடுபடுதல் இயல்பு. அப்பொருளின் தோற்றத்தை மனத்திற்கு அறிவித்தது பொறியுணர்வாதலால் மனவுணர்வும் பொறியுணர்வும் தம்முள் வேற்றுமையுடையன என்பது புலனும். அன்றியும் தேளுகிய 1. விலங்கும் பறவையும் என மேற்கூறப்பட்ட ஐயறிவுயிர் களுள் குரங்கு, யானே, கிளி முதலியவற்றுள் மனவுணர்வுடைய உளவாயின், அவையும் ஈண்டு ஆறறிவுயிராப் அடங்கும் என்பார். 'பிறவும் உளவே அக் கிளேப் பிறப்பே" என்ருர், எனவே இவ் வியல் இளம்பூரணருரையில் மட்டும் 34-ஆம் சூத்திரமாகக் காணப் படும். ஒருசார் விலங்கும் உளவெனமொழிப’ என்ற தொடர், பிற் காலத்தில் நுழைந்த இடைச் செருகலெனவே கொள்ளத் தக்க தா கும் .