பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 தொல்காப்பியம் நுதலியபொருள் சுவைப்பொருளே நாவென்னும் பொறி யுணர்ந்தவழி இன்புறுத லும் அதனையே கண்ணுள் வார்த்து மெய்யுணர்ந்த வழித் துன்புறு தலும், கத்துரியாகிய மணப்பொருளை மூக்கு உணர்ந்தவழி இன்புறுதலும் அதனையே கண்ணுணர்ந்த வழி இன்பங் கொள் ளாமையும் உடைமையால் அவை அவ்வப் பொறியுணர் வெனப் படும். மனமானது, கனவு நிலையிற்போன்று நனவு நிலையிலும் ஐம்பொறிகளின் உதவி வேண்டாது பொருள்களின் நலந்தீங்கு களைப் பகுத்துணரும் ஆற்றலுடையதென்பர் அறிஞர். அங்ங்ணம் ஐம்பொறிகளின் உதவியின்றி மனம்தானே உய்த்துணரும் உணர்வு மனவுணர்வெனப்படும். இவற்றுள் ஐம்பொறி யுணர்வுக்கும் அடிப்படையாய் முற்பிறந்தது மனவுணர்வாமாகவே, பொறியுணர் வென்பது, இதனை நுகர்கின்ருேம் என்று எண்ணும் உய்த்துணர் வுக்கு இடமின்றியே அவ்வப் பொறிகளுக்கு அமைந்த பழக்க மெனக் கருதும்படி தன்னியல்பில் நிகழ்வதாகும் எனப் பேராசிரியர் விளக்கிய திறம் இங்கு நினைக்கத் தகுவதாகும். ஆண்பாற் பெயர்:- இவ்வியல் 35 முதல் 51 வரையுள்ள தத்திரங்களால் ஆண்மைப் பண்பு பற்றிய பெயர்களுள் இவை யிவை இன்னின்னவற்றுக்கு உரியன என்பது விரித்துரைக்கப் படுகின்றது. களிறு என்ற ஆண்பாற் பெயரால் விதந்து பேசப்படுதல் யானைக்கு உரியதாகும். பன்றியும் களிறு என்ற பெயரால் வழங்குதல் விலக்கத் தக்கதன்ரும். ஒருத்தல்' என்னும் பெயர் பெறுவன: புல்வாய், புலி, உழை, மறை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை என்பனவாம். 1. களிறு என்ற பெயர், ஒரு சாதிக்குரிய பெயர் போன்று யானே யினத்துக்கேயுரியதாய் வழங்கும் சிறப்புரிமை யுடையமை யால் 'வேழக்குரித்தே விதந்துகளிறென்றல்’ எனச் சூத்திரஞ் செய்தார் ஆசிரியர்.