பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/496

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 299 மரபுடைய ஏைேர்க்கும் உரியவாகும். அன்னராயினும் இழிந் தோர்க்கு இவை கூறப்படுதல் இல்லை. உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபுகளைக் கூறுவன வாக 71 முதல் 85 முடியவுள்ள பதினைந்து சூத்திரங்களும் பிற்காலத்தாரால் இவ்வியலிற் புகுத்தப்பட்ட இடைச்செருகல் என்பது முன்னர் விளக்கப்பட்டது. மக்களை நிலவகையாற் பகுத்துரைப்பதன்றி நிறவகை யாகிய வருணத்தாற் பகுத்துரைக்கும் நெறியினை ஆசிரியர் தொல்காப்பியனர் மக்களது ஒழுகலாறுகளே விரித்துரைக்கும் முன்னைய இயல்களில் யாண்டும் குறிப்பிடவேயில்லை. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாகத் தம் காலத்திற் பயின்று வழங்கிய மரபுப் பெயர்களைத் தொகுத்துணர்த்தும் முறையிலேயே ஆசிரியர் இம்மரபியலே அமைத்துள்ளார். இதன் கண் !-முதல் 70-வரையுள்ள சூத்திரங்களும், 86-முதல் 90வரையுள்ள சூத்திரங்களும் இம்மரபினையே தொடர்ந்து விரித் துரைப்பனவாக அமைந்துள்ளன. இயல்பாக அமைந்த இத் தொடர்பு இடையுறவு பட்டுச் சிதையும் நிலையில் உயர்திணை நான்கு சாதிகளையும் பற்றிய பதினைந்து சூத்திரங்கள் 71-முதல் 85-வரையுள்ள எண்ணுடையனவாக இதன்கண் இடையே புகுத்தப்பட்டுள்ளன. முன், அகத்திணை யொழுகலாற்றுக்குரிய மக்களை வகைப் படுத்துக்கூறிய நிலையிலும் புறத்திணை யொழுகலாற்றில் வாகைத் 1. ஏனுேர்’ என்பதறகு, வைசியர், வேளாளர் என இளம் பூரணரும், குறுநிலமன்னர் எனப் பேராசிரியரும் பொருள் கொண்டனர். 2. ஈண்டு இழிந்தோர். ஒன்றது, நான்கு குலத்தினும் இழிந்த மாந்தரை எனக்கொள்வர் இளம்பூரணர். 3. இந்நூல் முற்பகுதி, பக்கம் 16.