பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 27 எனச் சிறுகாக்கைபாடினியார் தம்காலத்தில் இயற்றமிழிலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு என நான்காக வழங்கிய திறத்தை எடுத்துரைக்கின்றர். இவ்வாறே பிற்காலத்தவராகிய களவியலுரையாசிரியரும் தமிழ்தான் நான்கு வகைப்படும்; எழுத்துஞ் சொல்லும் பொருளும் யாப்புமென" என்றுரைத்துத் தமிழிலக்கணத்தை நால்வகையாகப் பகுத்தமை ஈண்டு ஒப்பு நோக்குதற்குரியதாகும். மேல் எடுத்துக் காட்டிய குறிப்புக்க ளால், தமிழ்நாட்டின் தென்னெல்லையாகிய குமரியாறு கடல் கொள்ளப்படாத நாளில் வாழ்ந்த தொல்காப்பியனுர்க்கு, அவ் வாறு கடல்கோளால் அழிந்து தென்னெல்லை கடலாய் விளங்கிய நாளில் வாழ்ந்தவராகிய சிறுகாக்கைபாடினியார், நெடுங்காலம் பிற்பட்டவரென்பது நன்கு துணியப்படும். எனவே சிறுகாக்கை பாடினியார் குறித்த தமிழ்நாட்டெல்லை தொல்காப்பியர் காலத் தமிழகத்திற்கு எல்லையாகாமை நன்கு பெறப்படும் தொல்காப்பியத்திற்குச் சிறப்புப்பாயிரங் கூறிய பனம்பாரனர் என்னும் புலவர் தொல்காப்பியனுரோடு ஒருசாலை மாளுக்கர் என்பது தொன்றுதொட்டு வழங்கும் வரலாருகும். "வடவேங்கடந் தென்குமரி என்னுஞ் சிறப்புப் பாயிரஞ் செய்தார் பனம்பாரளுர்’ எனப் பேராசிரியரும் 'பாயிரஞ் செய்வார் தன்னுசிரியரும் தன் ளுேடு ஒருங்கு கற்ற ஒருசாலை மாளுக்கரும் என இவர். அவருள் இந் நூற்குப் பாயிரஞ் செய்தார், தமக்கு (தொல்காப்பியனுர்க்கு) ஒருசாலை மாளுக்கராகிய பனம்பாரனர்" என நச்சினர்க்கினிய ரும் கூறுதல் காண்க. தொல்காப்பியனர் தமது நூலுக்குப் பனம்பாரளுர் கூறிய சிறப்புப் பாயிரத்தை ஏற்றுக் கொண்டு தம் நூன்முகத்து வைத்தலின், அச்சிறப்புப் பாயிரத்திற் சொல்லப் பட்ட செய்திகள் யாவும் நூலாசிரியராகிய தொல்காப்பியனரால் உடன்பட்டு ஏற்றுக்கொள்ளப் பெற்றனவேயென்பது திண்ணம் வடவேங்கடத் தென்குமரியெனப் பனம்பாரளுர் கூறிய எல்லே