பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 35 தமிழ் நாட்டின் தென்றிசையிற் காணப்படும் இந்தியப் பெருங் கடல் முன்னுளில் சகாரா பாலைநிலப் பகுதியில் நிலவியிருத்தல் வேண்டுமென்றும், கடல்கொள்ளப்படாத அந்நாளில் தென்றிசை யிலமைந்த பெருநிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் கால்வழி யினரே இக்காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியப் பெருங் கடலிடையே ஆங்காங்குள்ள தீவுகளிற் சிதர்ந்து காணப்படும் கரியமாந்தர் (நீகிரோவர்) என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். இப்பெரு நிலப்பரப்பு முழுவதும் ஒரே காலத்திற் கடலாற் கொள்ளப்பட்டிருத்தல் இயலாது. நிலவுருண்டையின் மையத்தே காலங்கள் தோறுந் தோன்றும் அதிர்ச்சிகளின் அளவுக்குத் தக்க வறு சகாரா பாலை நிலத்தின்கண் நின்றகடல் அவ்விடத்தை விட்டுப் பெயர்ந்து குமரிநாட்டை மெல்லமெல்ல விழுங்கியிருத் தல் வேண்டுமென்பர். சகாராவின் நீளம் மூவாயிரம் மைல் என்றும் அகலம் ஆயிரம் மைல் என்றும் கணக்கிடப் பட்டிருத்த லால் அங்கு நின்ற கடலால் விழுங்கப்பட்ட குமரி நாட்டின் பரப்பும் ஏறக்குறைய அவ்வளவினதாதல் வேண்டும் என்பர் ஆராய்ச்சியாளர். குமரியாற்றிற்கும் பஃறுளியாற்றிற்கும் இடையே யமைந்து கடலாற் கொள்ளப்பட்ட நாற்பத்தொன்பது நாடுகளும் எழுநூறு காவதப் பரப்புள்ளனவென்பர் அடியார்க்கு நல்லார். ஒரு காவதம் என்பது எண்ணுயிரம் முழங்கொண்டது (2-மைலும் 80 முழங்களும்) என்பர். இவ்வளவுப்படி 700-காவதம் என்பது 1600-மைல்களாம். 3000-மைல் நீளமும் 1000 மைல் அகலமும் உள்ள சகாரா வெளியில் நின்ற கடல்நீர், 700-காவதம் (1600 மைல்) உள்ள குமரிநாட்டை விழுங்கிற்று என்னுங்கொள்கையில் முரண்பாடு தோன்றுதற்கில்லை. இக்குமரி நாட்டினும் நான்கு மடங்கு பெரியதாய் இதன் தெற்கிலிருந்த பெருநிலமானது, மக்கள் தோன்றுதற்குப் பன்னுருயிர ஆண்டுகளுக்கு முன்னரே கடலுள் அமிழ்ந்து போயிற்றென்றும் மக்கள் தோன்றிய பின் பல்லாயிர ஆண்டுகள் கழித்துக் குமரிநாடு கடலுக்குள் முழ்கிய தென்றும், குமரிநாடு கடலாலழிந்த தொன்மை வரலாற்றினையே