பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தொல்காப்பியம் களவியலுரை கூறுகின்றதென்றும் அறிஞர் மறைமலையடிகளார் கூறுவர்." இலங்கைத் தீவின் வரலாற்றில் முன்று கடல்கோள் நிகழ்ந் தனவாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் முதலாவது கி.மு. 2387-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இரண்டாவது கி மு 504-ஆம் ஆண்டிலும் முன்ருவது கி. மு. 306-ம் ஆண்டிலும் நிகழ்ந்தன வாம். இம்மூன்றனுள் முதலாவதாகக் குறிக்கப்படும் கடல் கோளே குமரிநாட்டின் பெரும்பகுதியை விழுங்கிவிட்டது. இக் கடல்கோள் நிகழ்ச்சியினையடுத்தே தொல்காப்பியம் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது மறைமலையடிகளார் கருத்தாகும். தொல்காப்பியம் இயற்றப் பெறுதற்குரிய காரணம் தம் காலத்தில் நிகழ்ந்த கடல்கோளால் தமிழகத்தின் தென் பாலமைந்த பெரு நிலப்பரப்பும் தமிழ் நூல்கள் பலவும் அழிந்து பட்ட பேரிழப்பினையுணர்ந்து மனங்கவன்ற ஆசிரியர் தொல் காப்பியனுர், தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சியிற் கருத்துடைய ராய்த் தமிழ் மொழிக்குத் தொண்டு செய்ய எண்ணினர். குமரிநாட்டின் தென்பால் தென்மதுரைத் தலைச் சங்கத்திற் சான்ருேர் பலரும் போற்றி வளர்த்த தமிழ் மொழியானது இயல், இசை, நாடகம் என்னும் மூன்று துறைகளிலும் வளர்ச்சிபெற்றுத் திகழ்ந்தது. முத்தமிழ்த் துறையிலும் விரிந்த பல இலக்கியங்கள் தோன்றவே அவற்றின் அமைதியை விளக்கும் இலக்கண நூல் கள் பல தோன்றுவனவாயின. இங்ங்ணம் விரிந்து பரந்த தமிழ் நூற்பரப்பின் அமைதியைக் குமரிநாடு கடல்வாய்ப்பட்ட பின்னர் வாழ்ந்த மக்கள் அறியும் ஆற்றலற்றவராயினர். வடநாட்டினராற் பேசப்படும் ஆரிய மொழியும் தமிழ் நாட்டில் சிறிது சிறிதாக இடம்பெறுவதாயிற்று. இரு மொழிகளுக்குமுரிய இயல்புகளுள் 1. மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும் பக்கம். 565.570 2. to go 3 * * * 564-565