பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 4? கொள்ளுதற்கில்லை. குமரிநாட்டினைக் கடல்கொள்ளுவதற்கு முன் அமைந்த செந்தமிழ் நாட்டினையும் ஆண்டு முற்பட்டுத் தோன்றி வழங்கிய தொன்னூல்களையும் மேற்காட்டிய தொடரிற் குறித்தாரெனக்கொள்வதே பொருத்தமாகும். ஆகவே சிறப்புப் பாயிரத்தில் "வடவேங்கடந்தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்எனக் குறிக்கப்பட்டது தொல்காப்பியனர் காலத்தமிழக மென்றும், செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல்' என்புழிக் கூறப்பட்ட நிலம், தொல்காப்பியனர் காலத்திற்குச் சிறிது முன்னர்க் கடல்வாய்ப்பட்டதென்றும் வேறுபிரித்துணர்தல் வேண்டும். செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முற்பட்டுத் தோன்றியநூல் இதுவுவெனப் பெயர் கூருது முந்துநூல் எனப் பொதுப்படக்கூறியவதனுல் இயல், இசை, நாடகம் என்னும் பல்வேறு துறைகளைத்தழுவி இயற்றப்பெற்றுத் தொல்காப்பியஞர் காலத்தில் கிடைத்த எல்லா நூல்களும் முந்துநூல்களாகும். 'முந்துநூல் அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசை நுணுக்கமும்” என்றும், அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன எழுத்துச் சொற்பொருள் யாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசி யலும் அமைச்சியலும் பார்ப்பனவியலும் சோதிடமுங் காந்தருவ முங் கூத்தும் பிறவுமாம்” என்றும் நச்சிஞர்க்கினியர் கூறுவர். இங்குக் குறிக்கப்பட்டவற்றுள் அகத்தியம் நீங்கலாக எஞ்சிய நூல் கள் யாவும் தொல்காப்பியனுர் காலத்தில் வாழ்ந்த ஆசிரியர் களால் இயற்றப்பட்டனவாக இறையனர் களவியலுரையிற் கூறப் பட்டிருத்தலால் இவை தொல்காப்பியனுர்க்கு முன் குமரி நாட்டில் முற்பட்டுத் தோன்றிய தொன்மையுடைய முந்துநூல் ஆகா என்பது திண்ணம். "அவர்க்குத் (தலைச் சங்கத்தார்க்கு) நூல் அகத்தியம்" எனக் களவியலுரையாசிரியர் கூறுதலால் பாயிரத் தில் முந்துநூல் என்றது அகத்தியம் எனக் கொண்டார் பேரா சிரியர். “அகத்தியமே முற்காலத்து முதனுலென்பது உம் அதன்