பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு 43 தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலம் பழிப்பின் றுணர்ந்தோன் ” எனத் தம்மைச் சிறப்பித்துப் பாயிரஞ் செய்தற்கு உடம்பட்டமை யால் அகத்தியர் வழித் தோன்றிய ஆசிரியர் எல்லாருள்ளும் தொல்காப்பியனரே தலைவரென்பதனை அவரும் ஏற்று உடன் பட்டமை நன்கு புலம்ை. இவற்ருனெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதல் நூலென்பது உம் தொல்காப்பியம் அதன் வழிநூலென்பது உம் இனிது புலனும் என்பர் பேராசிரியர். ஆசிரியர் தொல்காப்பியனுர்க்கும் அகத்தியஞர்க்கும் உள்ள தொடர்பைப்பற்றிப் பன்னிருபடலப் பாயிரமும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரமும் குறிப்பிடுஞ் செய்திகள், தொல்காப் பியனுரோடு ஒருசாலை மாணுக்கராகிய பனம்பாரனர் பாடிய தொல்காப்பியச் சிறப்புப் பாயிரத்தில் சொல்லப்படவில்லை. அகத்தியர் தென்னுடு போந்த வரலாற்றினைப்பற்றிப் பல்வேறு கொள்கைகள் பேசப்படுகின்றன. அவற்றுள் ஒன்றற்கேனும் தொல்காப்பியத்திலோ அன்றி அதன் பாயிரத்திலோ ஆதரவு காணப்படவில்லை. அகத்தியரைப் பற்றிய கதைகளின் ஒருபகுதி உண்மையாயிருக்கலாம். அவருக்கும் தொல்காப்பியனருக்கும் உள்ள தொடர்பினைத் துணிதற்கேற்ற சான்றெதுவும் நூலிற் காணப்படவில்லை. அகத்தியனர் என ஆசிரியர் பெயரும், அகத்தியம் என நூற்பெயரும் இறையனர் களவியலுரையில்தான் முதன் முதலாகக் குறிக்கப்படுகின்றன. இவ்வுரைக் குறிப்பினைக் கொண்டு அகத்தியஞர்க்குத் தொல்காப்பியனர் மாணவரென்ருே அகத்தியத்திற்குத் தொல்காப்பியம் வழிநூலென்ருே தெளிவாகச் சொல்லுதற்கு இடமில்லை. அகத்தியச் சூத்திரங்கள் எனப் பின் னுள்ளோராற் காட்டப்பெற்ற சூத்திரங்களை நோக்குங்கால் அவை