பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தொல்காப்பியம் தொடுபட்ட சான்ருேர் எனவும் அக்கொள்கையை மறுப்பாரை வேதவழக்கொடு மாறுகொள்வார் எனவும் பேராசிரியர் குறிப் பிடுவதனுல் அவர் காலத்தில் அகத்தியர்க்கு மாணவர் தொல் காப்பியர் என்னுங் கதையினை உடன்படுவாரும் மறுப்பாரும் என இரு திறத்தார் இருந்தமை புலம்ை. தொல்காப்பியர் அகத்திய ஞர்க்கு மாணவரல்லர் என்னுங் கொள்கையினர் தம் காலத்தில் வழங்கிய அகத்தியச் சூத்திரங்களுக்கும் தொல்காப்பியத்திற்கு முள்ள முரண்பாடுகளைச் சான்ருகக் காட்டியிருத்தல் வேண்டும். இந்நிலையில் அகத்தியர் மாணவர் தொல்காப்பியர் என்னுங் கொள்கையுடையோர், அகத்தியர்க்கு மாணவராகத் தம்மாற் சொல்லப்படும் தொல்காப்பியர்ை அகத்தியர்க்கு மாறுபட நூல் செய்வதற்குரிய காரணத்தினைப் படைத்துரைக்க வேண்டிய இன்றியமையாமை யேற்பட்டது. இந்நிலையிற் புனைந்து வழங்கப் பெற்ற கதையே தொல்காப்பியச் சிறப்புப் பாயிர வுரையில் நச்சிர்ைக்கினியரால் எடுத்துக்காட்டப்பெற்ற தாகும். புனைந்து வழங்கும் கதை தேவரெல்லாங்கூடி மேருமலையிற் சேர்ந்து தங்கினர். அவர் பாரம் பொருது மேருமலை தாழத் தென்றிசை உயர்ந்தது. வட திசை தாழத் தென்றிசை யுயரக்கண்ட தேவர்கள், இருதிசை யையும் சமப்படுத்துதற்குரிய ஆற்றலுடையவர் அகத்திய முனிவரே யெனத் தெளிந்து அவரைத் தென்றிசைக்கட் சென்று சமன் செய்யும்படி வேண்டிக்கொண்டனர். தேவரது வேண்டுகோட் கிணங்கித் தென்றிசை நோக்கி வருகின்ற அகத்தியனுர், கங்கை யாரிடம் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டார். பின்னர் யமதக்கினியாரிடஞ்சென்று திரணதுமாக்கினியாரை அழைத்துக் கொண்டார். புலத்தியனரிடஞ்சென்று அவருடன் பிறந்த குமரி யார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்பத் திருமணஞ் செய்து அங்கிருக்கச்செய்து திரும்பித் துவாரபதிக்கு வந்து, நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்