பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 தொல்காப்பியம் 'தேனர் கமழ் தொங்கல் மீனவன் கேட்பத் தெண்ணீரருவி காஞர் மலயத் தருந்தவன் சொன்ன கன்னித் தமிழ் நூல்" என வருந் தொடரால் அமிதசாகரர் உணர்த்திப் போந்தார். வீரசோழிய நூலாசிரியராகிய புத்தமித்திரனர் அகத்தியரைப் பற்றிக் கூறும்கதை ஏனையோர் கருத்துடன் சிறிது வேறுபட்டுளது. அவலோகிதேசுவரரிடம் அகத்தியர் தமிழ் பயின்று தமிழுக்கு இலக்கணஞ் செய்தார் என்பார், 'ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமிழ்” எனத் தமிழின் பெருமையைப் பாராட்டுகின்ருர், அவலோகிதர் என்பார் புத்த சமயத்தவரால் வணங்கப்பெறுந் தெய்வமாவார். அவர் போதலகிரியில் தம் பத்தினி தாரையுடன் எழுந்தருளி யுளளாா எனபா. அகத்தியர் சிவபெருமான்பால் தமிழ் பயின்று இலக்கணஞ் செய்தார் என்னுங் கதையே தமிழ்நாட்டிற் பல சமயத்தாராலும் உடன்பட்டு வழங்கப்பெற்று வருகிறது. படைப்புக் காலந்தொட் டுத் தென்னுட்டில் நிலவிவரும் தமிழ் மொழியைச் சிவபெருமான் அகத்தியஞர்க்கு அறிவுறுத்த, அம்முனிவர் உலக வழக்கிலுைம் தம் மதி நுட்பத்தாலும் ஆராய்ந்து தமிழுக்கு இலக்கணஞ் செய்து புகழ்பெற்ருர் என்பதனை, ' என்றுமுள தென்றமிழ் இயம்பி யிசை கொண்டான் " எனவும்,