பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை திருவாளர் T.M. நாராயண சாமி பிள்ளை அவர்கள் M.A.E.L., M.A.C" முன்னுள் துணைவேந்தர், அண்ணுமலைப் பல்கலைக்கழகம் உலகியல் வழக்கும் இலக்கியப் பழமையும் ஒரு சேரப் பெற்று விளங்கும் மொழிகளுள் நம் தமிழ்மொழியும் ஒன்ருகும். இது, காலந்தோறும் ஏற்படும் சிதைவுகளுக்கு உள்ளாகாது எதிர்காலத்தில் அமையவேண்டிய புதிய புதிய ஆக்கங்களையும் பெற்று எக்காலத்தும் நிலைபெற்று வழங்கும் பண்புடையதாக நம் முன்னேர்களாற் போற்றி வளர்க்கப்பெற்றுள்ளது. இவ்வுண்மை கருதியே கவிச் சக்கரவர்த்தி கம்பரும் என்றுமுள தென்தமிழ்' என இதனைப் பாராட்டிப் போற்றியுள்ளார். இவ்வாறு நம் தமிழ் மொழியை இனிய எளிய இலக்கண வரம்புகோலிப் போற்றி வளர்த்த பெரியோர்களுள் ஆசிரியர் தொல்காப்பியருைம் ஒருவர். இவர்செய்த தொல்காப்பியம் என்ற நூல், தமிழுக்கு எக்காலத்தும் அமையவேண்டிய இயற்கை. வளர்ச்சி முறையை மனத்துட்கொண்டு இயற்றப்பட்டதாகும். எழுத்தின் திறனுலும் சொல்வளத்தாலும் பொருள்களைத் தெளி வாக அறிவிக்கும் வழக்கும் செய்யுளும் ஆகிய இருவகை நெறி களாலும் தமிழ்மொழி முற்காலத்தில் எவ்வாறு இலக்கண வரம்பு கோலி வளர்க்கப்பெற்றது என்ற விவரத்தைத் தெளிவாக நாம் உணர்ந்து கொள்வதற்கு வழிகாட்டியாக விளங்குவது இத்தொல் காப்பியமே. இதன்கண் தமிழ் எழுத்துக்களின் பிறப்பினை விளங்கக் கூறும் பிறப்பியல் என்ற பகுதி, இக்கால ஒலிநூல் முறைக்குப் பொருந்தும் வகையில் அமைந்திருக்கும் அழகினை அத்துறையில் வல்ல அறிஞர்கள் வியந்து பாராட்டுகின்ருர்கள். இந்நூல் தமிழின் பழங்கால இலக்கண அமைப்பை விளக்குவதாயினும்,