பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கிய வரலாறு స్త్రీ லானும் இதனை மேற்கோளாக முதன்முதல் எடுத்துக்காட்டிய மயிலைநாதர் அகத்தியச் சூத்திரங்கள் என்ற பெயராற் காட்டியன பலவும் இதுபோன்று பிற்காலச் சொன்னடையினை யுடையனவாகக் காணப்படுதலானும் இச்சூத்திரத்தில் ஒதிய புலவனும் உளன் எனக் குறிப்பிடுவதன்றி அங்ங்ணிம் ஒதியவன் பாணினியேயெனக் குறிப்பிடப் படாமையால் இதன்கண் "புலவனும் உளன் என்றது பாணினியையே என உறுதியாகக் கொள்ளுதற்கு இடமின்மையானும் பிற்கால அகத்தியச் சூத்திரங் களை யாதரவாகக்கொண்டு தலைச்சங்கப் புலவராகிய அகத் தியனர் காலத்தை அறுதியிட்டுரைத்தல் இயலாத தொன்ரும். ஆகவே தலைச்சங்கப் புலவராக இறையனர் களவியல் கூறும் அகத்தியனரும் வடமொழி யிலக்கண ஆசிரியர் பாணினியாரும் ஒருகாலத்தவர் என்று கொள்ளுதற்கு ஒரு சிறிதும் இயைபில்லே யென்க. நிலந்தரு திருவிற் பாண்டியன் ஆசிரியர் தொல்காப்பியனர் தாம் இயற்றிய தொல்காப் பியத்தை நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்தே அதங் கோட்டாசிரியர் முன்னிலையில் அரங்கேற்றினர் எனப் பனம்பார ர்ை கூறுதலால், தொல்காப்பியனரை யாதரித்துத் தொல் காப்பியத்தைச் செய்வித்தவன் அவர் காலத்து வேந்தனுகிய நிலந்தரு திருவிற் பாண்டியனே என்பது நன்கு புலனுகும். இவ்வேந்தன் முதலூழியிறுதிக்கண் தென்மதுரையில் தலைச் சங்கத்தினை தோற்றுவித்துப் புரந்த பாண்டியர் எண்பத்தொன் பதின்மருள் இறுதியி லிருந்தவன். இவன் காலத்தில் பாண்டி நாட்டின் தென்பாற்கண்ணதாகிய பஃறுளியாறு முதல் அதன் வடபாற் குமரிமலைவரை யமைந்த நிலப்பகுதியைக் கடல் புகுந்து அழித்தது. இங்கினம் கடல்கோளால் தன்னுடு சுருங்கிய நிலை யினையுணர்ந்த இவ்வேந்தன், தன் கீழ் வாழுங் குடிமக்களுக்கு வேண்டிய நிலப்பரப்பினைத் தேடித் தருதற்குரிய கடமையுடையவ