பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தொல்காப்பியம் மாகப் பழைய கோட்டைமதில் முதலியன இவ்வூரிற் சிதைந்த நிலையில் உள்ளன. அதங்கோடு என்பது திருவென்னும் அடை மொழி பெற்றுத் திருவதங்கோடு எனவும் வழங்குவதாயிற்று. பழமை மிக்க இவ்வூரின் பெயரே இக்காலத்தில் திருவிதாங்கோடு எனத் திரிந்து நாட்டின் பெயராகவும் வழங்குகின்றது. இவ் வூரின் தொன்மை யுணராதார் ரீவாழுங்கோடு என்பதே திருவிதாங்கோடு எனச் சிதைந்ததென்பர். ரீவாழுங்கோடு என்னும் மணிமிடை பவளமாகிய கலவைத் தொடர் பண்டை நாளில் வழங்காமையானும், இக்காலத்தும் அதங்கோடு என்னும் பெயரே எல்லா மக்களாலும் உடன்பட்டு வழங்கப் பெறுதலானும், திருவிதாங்கோடு என்பதைத் திருவதங்கோடு என்பதன் திரிபாகக் கொள்ளுதலே வரலாற்று முறைக்கு ஏற்புடையதாகும். பிற்காலத் தில் சேரநாட்டுடன் இணைக்கப்பட்ட வேணுடு, நாஞ்சில் நாடு முதலிய தென்திருவாங்கூர்ப் பகுதிகள், பண்டை நாளிற் பாண்டி நாட்டின் பகுதிகளாகவே விளங்கினவென்பது, தமிழ் நூல்களா லும் கல்வெட்டுக்களாலும் நன்கறியப்படும். ஆகவே பிற்காலத்தில் திருவாங்கூர்ப் பகுதியிலுள்ள அதங்கோடு என்னும் ஊரும் முன்னளிற் பாண்டியராட்சிக்கு உட்பட்டிருந்ததென்பது இனிது புலனும். பாண்டியர்க்குரிய இந்நிலப்பகுதி மிகமிகப் பிற்காலத்தே தான் மலையாளர் ஆட்சிக்கு உட்படுவதாயிற்று. இதனைச் சேர நாடெனவும், பனி. மழை, வெயில் என்னுஞ் சொற்கள் தொல் காப்பியனர் கூறியவாறு அத்துச் சாரியை பெற்று பனியத்துப் போகருதே, மழையத்துப் போகருதே, வெயிலத்துப் போகருதே' என இக்கால மலையாள மொழியில் வழங்குதல் கொண்டு தொல்காப்பியனரும் அதங்கோட்டாசானும் பிறந்த நாட்டிலே தான் பிற்காலத்தில் தமிழ் மலையாளமாக உருத்திரிந்ததெனவும் கருதுவாருமுளர். சேர மன்னர்களின் ஆட்சிக்குரிய குட்ட நாட்டிலும் குடநாட்டிலும் வழங்கிய தமிழே பிற்காலத்தில் 1. ராவ்சாகிப் S. வையாபுரிப் 3ರ್ಪಶಿruafsir, தமிழ்ச்சுடர் மணிகள் பக்கம், 4, 5,